பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2023 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்.
(ii) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை.
(iii) 2023 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினிக் கல்லூரியின் ஆண்டறிக்கை.
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எரங்க குணசேகர - மூன்று மனுக்கள்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அர்கம் இல்யாஸ் - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரத்ன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ திலித் ஜயவீர
இலங்கை பிக்கு பல்கலைக்கழகம் மூடப்படல்
மேற்சொன்ன வினாவுக்கு கௌரவ கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்று
பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான பிரச்சினைகள் பற்றி 2025.01.08 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கௌரவ சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(i) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2025) - குழு
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 6 வரையான) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(ii) மில்கோ (பிறைவட்) லிமிட்டெட் இன் ஆண்டறிக்கை (2018)
(iii) மில்கோ (பிறைவட்) லிமிட்டெட் இன் ஆண்டறிக்கை (2019)
(iv) கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் வருடாந்த அறிக்கை (2020)
(v) காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கைகள் (2015, 2016, 2017, 2018, 2019 மற்றும் 2020)
(vi) காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை (2021)
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“உப்புத் தடையால் நில்வலா நதி பெருக்கெடுப்பதற்கான தீர்வு” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (பேராசிரியர்) எல்.எம். அபேவிக்ரம அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1832 மணியளவில் பாராளுமன்றமானது 2025 மார்ச் 14ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks