பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : “சேர்பெறுமதி வரி (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதியொன்று கிடைக்கப் பெறல்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை.
(ii) 2023 ஆம் ஆண்டுக்கான மாணிக்கம் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்றுவிப்பு நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை.
(iii) 2023 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட லங்கா மின்சார (தனியார்) கம்பனியின் வருடாந்த அறிக்கை.
(iv) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்.
(v) 2022 ஆம் ஆண்டுக்கான கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஆண்டறிக்கை.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கே.வி. சமந்த வித்யாரத்ன - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான்
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) (செல்வி) கெளஷல்யா ஆரியரத்ன
(v) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்று
(i) ‘படலந்த’ ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான கூற்றொன்றினை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் முன்வைத்தார்.
(ii) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்தியர் கஸ்தூரி ஜீவகனின் இடமாற்றம் பற்றி 2025.03.11 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(i) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2025) - குழு
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 11 வரையான) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(ii) எல்கடுவ பெருந்தோட்டக் கம்பெனியின் வருடாந்த அறிக்கைகள் (2012, 2013, 2014, 2015, 2016, மற்றும் 2017)
(iii) இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2017)
(iv) இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2018)
(v) இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2019)
(vi) இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2020)
(vii) களுபோவிட்டியான தேயிலைத் தொழிற்சாலை கம்பெனி லிமிரெட்டின் வருடாந்த அறிக்கை (2020/2021)
(viii) இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2020)
(ix) இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2021)
(x) சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2022)
(xi) இலங்கை தேயிலைச் சபையின் வருடாந்த அறிக்கை (2022)
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“உருளைக்கிழங்கு விவசாயிகள் எதிர்கொள்ளும் இடர்கள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சாமர சம்பத் தசனாயக அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1824 மணியளவில் பாராளுமன்றமானது 2025 மார்ச் 15ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks