E   |   සි   |  

2025 மார்ச் 17ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : “சேர்பெறுமதி வரி (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதியொன்று கிடைக்கப் பெறல்
2 : பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு “பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் உள்ள சித்திரவதைக்கூடங்கள், சட்டரீதியற்ற தடுப்பு நிலையங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியவற்றை விசாரணை செய்த ஆணைக்குழுவின் அறிக்கையின்” அச்சுப் பிரதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2022 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளுக்கான பட்ட மேற்படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை.
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான சென்ட்ரெல் இன்ஜினியரிங் சேர்விஸெஸ் (ப்ரைவட்) லிமிற்றட்டின் வருடாந்த அறிக்கை.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக் குழுவின் உறுப்பினர் கௌரவ (டாக்டர்) மதுர செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன கமகே  - இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லசித் பாஷண கமகே  - இரண்டு மனுக்கள்
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷண எகொட வித்தான

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-

துறைசார் மேற்பார்வைக் குழுக்கள்

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 111 இன் பிரகாரம் தொழிற்படுவதற்காக, பின்வருமாறு ஏழு (07) துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் பெயர் குறிப்பிட்டு நியமிக்கப்படுமாக:-

1.    பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
2.    உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
3.    கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
4.    சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
5.    சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
6.    விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
7.    ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

ஒவ்வொரு துறைசார் மேற்பார்வைக் குழுவும் தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் பன்னிரெண்டு (12) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக. ஒவ்வொரு துறைசார் மேற்பார்வைக் குழுவினதும் கூட்ட நடப்பெண் மூன்று (03) உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2025) - குழு
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

(ii) காலி மரபுரிமை மன்றத்தின் வருடாந்த அறிக்கை (2021) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

சபையால் அங்கீகரிக்கப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“புதிய அரசியமைப்பை அறிமுகம் செய்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அஜித் பி. பெரேரா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2025 மார்ச் 18ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks