பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சனாதிபதியின் செய்திகள்
1 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)
சபாநாயகரின் அறிவித்தல்கள்
2 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
3 : "சேர்பெறுமதி வரி (திருத்தம்) " எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்
4 : கௌரவ கோசல நுவன் ஜயவீர, பா.உ. அவர்களது மறைவு
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —
• 2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LVII ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XLIV ஆம் பகுதியையும்;
• 2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LX ஆம் பகுதியையும்; மற்றும்
• 2023 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXIX மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXII ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2023 ஆம் ஆண்டுக்கான மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆண்டறிக்கையும் வருடாந்த கணக்கறிக்கையும்.
(ii) 2023 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் தேசிய நூலகம் மற்றும் தகவல் அறிவியல் நிறுவனத்தின் ஆண்டறிக்கை.
(iii) 2023 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆண்டறிக்கை.
(iv) 2023 ஆம் ஆண்டுக்கான கட்புல அரங்கக் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை.
(v) 2023 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்.
(vi) 2023 ஆம் ஆண்டுக்கான நிருவாக மேன்முறையீடுகள் நியாயசபையின் செயலாற்றுகை அறிக்கை.
(vii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நீதிச் சேவை ஆணைக்குழுச் செயலகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை.
(viii) 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் 9 ஆம் பிரிவின் கீழ் நலன்புரி அனுகூலங்கள் தொடர்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2025 மார்ச் 24 ஆம் திகதிய 2429/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அஸ்வெசும நலன்புரி அனுகூலங்கள் கொடுப்பனவுத் திட்டம்.
(ix) 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் ஆண்டறிக்கை.
(x) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை இணக்கப்பாட்டுப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை.
(xi) 2022 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட லங்கா சீனி (தனியார்) கம்பனியின் ஆண்டறிக்கை.
(xii) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய நீரியல் வாழ் செய்கை அபிவிருத்தி அதிகார சபையின் வருடாந்த அறிக்கை.
(xiii) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை.
(xiv) 2021 ஆம் ஆண்டுக்கான கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் ஆண்டறிக்கை.
(xv) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள அப்போதைய நிறுவனங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை.
(xvi) 2023 ஆம் ஆண்டுக்கான கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(xvii) 2023 ஆம் ஆண்டுக்கான தொல்பொருளியல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (டாக்டர்) நஜீத் இந்திக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (டாக்டர்) நிஷாந்த சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி - ஏழு மனுக்கள்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி
(iii) கௌரவ லால் பிரேமநாத்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
பராடே சட்டம் காரணமாக சிறிய, நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்கள்
மேற்சொன்ன வினாவிற்கு நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ ரவி கருணாநாயக்க
இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு ஐக்கிய அமெரிக்காவின் வரிக் கொள்கை
மேற்சொன்ன வினாவிற்கு பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
இந்தியப் பிரதமரின் இலங்கை வருகை மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள் தொடர்பான கூற்றொன்றினை வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்கள் முன்வைத்தார்.
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ எரங்க குணசேகர
தன்னைப் பற்றிய வதந்தி செய்தி அறிக்கை
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i) குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலம்
(ii) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
(iii) 2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 5 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும், 3(ஈ) மற்றும் 3(உ) பிரிவுகளிற்கமைய, துர்நடத்தை மற்றும் பதவியின் தத்துவங்களை பாரதூரமாக துர்ப்பிரயோகம் செய்தமை காரணமாக, பொலிசுப் பரிசோதகர் தலைமையதிபதி ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை பொலிசுப் பரிசோதகர் தலைமையதிபதி பதவியிலிருந்து நீக்குவதற்கு மேற்படி சட்டத்தின் 5 பிரிவின் பிரகாரம் விசாரணைக் குழுவொன்றை நியமிப்பதற்கான தீர்மானம் - வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 151; எதிராக 0)
அதனையடுத்து, 1757 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஏப்ரல் 9ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks