E   |   සි   |  

2025 ஏப்ரல் 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2022 ஆம் ஆண்டுக்கான மானிட சாஸ்திர மற்றும் சமூக விஞ்ஞானம் தொடர்பான உயர் கல்விக்கான தேசிய மத்திய நிலையத்தின் ஆண்டறிக்கை.
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான தேசிய சேமிப்பு வங்கியின் ஒருங்கிணைந்த ஆண்டறிக்கை.
(iii)    2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டுகளுக்கான, நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பணவீக்க இலக்கிலிருந்து முதன்மைப் பணவீக்கத்தின் விலகல் தொடர்பிலான அறிக்கை.
(iv)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு.
(v)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள  நிறுவனங்கள் தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4)  இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை.
(vi)    2022 ஆம் ஆண்டுக்கான தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்.
(vii)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை காணிகள் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்.
(viii)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை அணு சக்தி சபையின் வருடாந்த அறிக்கை.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) தம்மிக பட்டபெந்தி  
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லசித் பாஷண கமகே  - இரண்டு மனுக்கள் 

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ ரவி கருணாநாயக்க

நெல் அறுவடை மற்றும் அரிசி இறக்குமதியிலுள்ள சிக்கல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் உள்ள சித்திரவதைக்கூடங்கள், சட்டரீதியற்ற தடுப்பு நிலையங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியவற்றை விசாரணை செய்த ஆணைக்குழுவின் அறிக்கை (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயம்)

விவாதிக்கப்பட்டதுடன் எதிர்வரும் தினமொன்றுக்கு ஒத்திவைக்கப்பட்டது.


அதனையடுத்து, 1802 மணியளவில் பாராளுமன்றமானது 2025 மே 8ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks