பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
புதிய உறுப்பினர்களின் உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்
கௌரவ கோசல நுவான் ஜயரத்ன அவர்களின் மரணம் காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கெளரவ ரத்னாயக்க முதியன்சலாகே சமன்த ரணசிங்க அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சனாதிபதியின் செய்திகள்
1 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)
சபாநாயகரின் அறிவித்தல்கள்
2 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
3 : “சேர்பெறுமதி வரி (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதியொன்று கிடைக்கப் பெறல்
4 : கௌரவ சாமர சம்பத் தசனாயக, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
5 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
6 : அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
7 : அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
8 : அந்தந்த துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
9 : அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —
• 2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் XIX ஆம் பகுதியையும்;
• 2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LXIII ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XLIII ஆம் பகுதியையும் ஆம் பகுதியையும்; மற்றும்
• 2023 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XL ஆம் பகுதியையும், மூன்றாவது தொகுதியின் XVII ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXIII ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2022 ஆம் ஆண்டுக்கான ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை.
(ii) 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை.
(iii) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தின் ஆண்டறிக்கை.
(iv) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை.
(v) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை.
(vi) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை வங்கியின் ஆண்டறிக்கை.
(vii) 2023 ஆம் ஆண்டுக்கான மக்கள் வங்கியின் ஆண்டறிக்கை.
(viii) 2023 ஆம் ஆண்டுக்கான அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் வருடாந்த அறிக்கை.
(ix) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2025 மார்ச் 19 ஆம் திகதிய 2428/07 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
(x) 2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 2(1) ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2025 சனவரி 31 ஆம் திகதிய 2421/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xi) 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 51 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 19 ஆம் பிரிவின் கீழ் மோட்டார் வாகனங்கள் மீதான சொகுசு வரி தொடர்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2025 சனவரி 31 ஆம் திகதிய 2421/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்.
(xii) 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க திருத்தப்பட்டதான உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தித் தீர்வை தொடர்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2025 சனவரி 31 ஆம் திகதிய 2421/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xiii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவுடன் சேரத்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது இலங்கை, வயம்ப பல்கலைக்கழகத்தில் போஷணை மற்றும் உணவுமுறைத் துறையினை நிறுவுதல் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 சனவரி 08 ஆம் திகதிய 2418/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xiv) 1974 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, சுங்க (திருத்தச்) சட்டத்தினாலும், 1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்க சுங்க (திருத்தச்) சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான (235 ஆம் அத்தியாயம்) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 19(அ) ஆம் பிரிவின் கீழ் இறக்குமதி மீது விதிக்கப்பட்ட சுங்கத் தீர்வை தொடர்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2025 பெப்ரவரி 25 ஆம் திகதிய 2425/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xv) 2025 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2025.03.01 முதல் 2025.03.27 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்தி நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு.
(xvi) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஒலிரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(xvii) 2020 ஆம் ஆண்டுக்கான மில்கோ (தனி) நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை.
(xviii) 2023 ஆம் ஆண்டுக்கான காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை.
(xix) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேயிலை சபையின் வருடாந்த அறிக்கை.
(xx) 2023 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத் தொழிற்சாலை திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(xxi) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை.
(xxii) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் வருடாந்த அறிக்கை.
(xxiii) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக் கூற்று.
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க - ஏழு மனுக்கள்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷண எகொட வித்தான - மூன்று மனுக்கள்
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
சர்வதேச நாணய நிதி ஒப்பந்தம், மின்சார சட்டமூலம் தொடர்பான சிக்கல்கள், எளிமைப்படுத்தப்பட்ட சேர்பெறுமதி வரி (திருத்தம்), சிரேஷ்ட பிரஜைகளுக்கான கணக்கின் மீதான விகிதம், பிள்ளைகளுக்கான கணக்கில் நிறுத்திவைத்தல் வரி போன்றவை.
மேற்சொன்ன வினாவுக்கு கௌரவ நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் பதிலளித்தார்.
(ii) கௌரவ சிவஞானம் சிறீதரன்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் காணிப் பிரச்சினைகள்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
நெல் அறுவடை மற்றும் அரிசி இறக்குமதியிலுள்ள சிக்கல்கள் தொடர்பாக 2025.04.10 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ வசந்த சமரசிங்க அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i) வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) - 1957 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க, வெளிநாட்டுக் கடன்கள் சட்டத்தினை நீக்குவதற்கானது
(ii) தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தம்) - 2022 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(iii) தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தம்) - 1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ ரவி கருணாநாயக்க அவர்களுக்கு “நிகழ்நிலைக் காப்புச்சட்டம் (இரத்துச் செய்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயம்)
சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2025 மே 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks