பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : வாய்மொழி வினாவிற்கான துணை வினா கேட்பது தொடர்பானது
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்கள் தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை.
(ii) 2023 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் வருடாந்த அறிக்கை.
(iii) 2021 ஆம் ஆண்டுக்கான பிரதேச அபிவிருத்தி வங்கியின் வருடாந்த அறிக்கை.
(iv) 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் ஆண்டறிக்கை.
(v) 2023 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி லொத்தர் சபையின் ஆண்டறிக்கை.
(vi) 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய லொத்தர் சபையின் ஆண்டறிக்கை.
(vii) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஏற்றுமதிக் கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை.
(viii) 2023 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ விஞ்ஞானங்கள் பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை.
(ix) 2023 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர் இரசாயனவியல், மூலக்கூற்று உயிரியல் மற்றும் உயிர் தொழில்நுட்பவியல் நிறுவகத்தின் ஆண்டறிக்கை.
(x) 2023 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்.
(xi) 2023 ஆம் ஆண்டுக்கான களனி பல்கலைக்கழகத்தின் பாளி, பௌத்த கல்வி பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் ஆண்டறிக்கை.
(xii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4)(ஆ) ஆம் பிரிவின் கீழ் உருகுணை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்குப் பதிலாக 2025 பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில், தகுதிவாய்ந்த அதிகாரியாக சிரேஷ்ட பேராசிரியர் ஆர்.எம்.யூ.எஸ்.கே. ரத்நாயக்க அவர்களை நியமித்தல் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 பெப்ரவரி 24 ஆம் திகதிய 2425/03 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(xiii) 2022 ஆம் ஆண்டுக்கான தி அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிட்டட்டின் ஆண்டறிக்கை.
(xiv) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் மேலாண்மை நிறுவனத்தின் ஆண்டறிக்கை.
(xv) 2021/2022 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை உரக்கம்பனியின் வருடாந்த அறிக்கை.
(xvi) 2022 ஆம் ஆண்டுக்கான தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையின் வருடாந்த அறிக்கை.
(xvii) 2023 ஆம் ஆண்டுக்கான பொல்கொல்ல தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகத்தின் ஆண்டறிக்கை.
(xviii) 2023 ஆம் ஆண்டுக்கான ஹோட்டல் டெவலப்பேர்ஸ் (லங்கா) லிமிட்டட்டின் ஆண்டறிக்கை.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா - மூன்று மனுக்கள்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் நிபுண ஆரச்சி
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கே. சுஜித் சஞ்ஜய பெரேரா
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர - மூன்று மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
அரசாங்கங்களுக்கிடையிலான ஒப்பந்தத்தின் கீழ் மருந்து கொள்வனவு செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம்
(ii) கௌரவ ரவி கருணாநாயக்க
பல்கலைக்கழகக் கல்வி, அனுமதி போன்றன
மேற்சொன்ன வினாவுக்கு கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
ஐக்கிய அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட பரஸ்பர வரி மற்றும் சர்வதேச நாணய நிதியக் கடனை திருப்பிச் செலுத்துதல் தொடர்பாக 2025.04.09 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சார்பாக நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும அவர்கள் பதிலளித்தார்.
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா
தனத பாராளுமன்ற உரைகள் ஒளிபரப்பப்படாமை
சிறப்புரிமைகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாமர சம்பத் தசனாயக அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2025 மார்ச் 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர அவர்களுக்கு “மாபொட்டுவன ஸ்ரீ பியரத்தன தேரர் சுவசெவன மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 6 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன:-
• இலங்கைப் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் அரச தலைவர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைகள் அனுபவிக்கின்ற சிறப்புரிமைகளை பொருத்தமான வகையில் குறைத்தல்
இலங்கைப் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் அரச தலைவர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைகள் அனுபவிக்கின்ற சிறப்புரிமைகள் தொடர்பில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போதும் இந்நாட்டின் சமூகத்திலும் உரையாடல் ஏற்பட்டுள்ளதால் நாட்டின் பொது மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இலங்கைப் பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள், முன்னாள் அரச தலைவர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைகளுக்கு நீண்ட காலமாக வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை பொருத்தமான வகையில் குறைத்தல், அகற்றுதல் அல்லது அது தொடர்பில் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாராளுமன்றத்தின் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல உறுப்பினர்களிடமிருந்தும் நியாயமான பதிலை பாராளுமன்றத்தில் விவாதித்துப் பெறுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி மற்றும் விநியோகத்தின் போது அரச துறையின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்கான வேலைத் திட்டமொன்றைத் தயாரித்தல்
இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஏனைய பொருட்களை இறக்குமதி செய்கின்ற செயல்முறையானது ஒரு சிலரின் கைகளில் உள்ள நிலையில் மக்கள் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கின்ற காரணத்தினால் இந்நிலைமையைத் தவிர்ப்பதற்காக அரச துறையின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு பொருத்தமான வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் தயாரிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• கணக்காய்வு அறிக்கைகளின் ஊடாக முன்வைக்கப்படுகின்ற பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக வேலைத் திட்டமொன்றைத் தயாரித்தல்
அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் நிகழும் பல்வேறு நிதி மோசடிகள் தொடர்பான விடயங்கள் கணக்காய்வறிக்கைகள் ஊடாக வெளிப்படுத்தப்படுவதால், அரச நிறுவனங்களில் அவ்வாறான ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெறுவதைத் தடுக்கும் பொருட்டு அவ்வறிக்கைகளின் ஊடாக முன்வைக்கப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கிறது.
• இலங்கையிலுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாழ்வதற்கு வீடு ஒன்றை வழங்குதல்
இலங்கையிலுள்ள ஒவ்வொரு குடும்பமும் வாழ்வதற்கான வீடு ஒன்றிற்கு உரித்துடையதாக இருத்தல் வேண்டும் என்ற காரணத்தால் பிரதான குடியிருப்பாளரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக வீடு ஒன்றை வாங்குவதற்கு, கட்டுவதற்கு அல்லது வாடகைக்குப் பெறுவதற்கு அவரை வலுவூட்டுவதன் மூலம் அவருக்கு வசதிசெய்து கொடுத்தல் அவசியமாகும் என இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• பொது போக்குவரத்து தர நிர்ணயங்களுக்கமைவான பேருந்துகளை மாத்திரம் நாட்டுக்கு கொண்டு வருதல் தொடர்பான சட்டங்களை ஆக்குதல்
இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேருந்துகளும் தனியார் துறை பேருந்துகளும் போக்குவரத்துக்கு தகுந்த நிலைமையில் காணப்படாமையினாலும், குறித்த பேருந்துகளில் அதி கூடிய பேருந்துகள் லொறி அடிச்சட்டங்கள் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளவை என்பதாலும், எதிர்காலத்தில் அரச மற்றும் தனியார் துறைக்கு பேருந்துகளை இறக்குமதி செய்கையில் பயணிகள் போக்குவரத்துக்கு வடிவமைக்கப்பட்ட, பயணிகள் சௌகரியத்துக்கு உகந்த, பொது போக்குவரத்து தர நியமங்களுக்கமைவான பேருந்துகளை மாத்திரம் இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு ஏதுவான சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• இலங்கையில் "அபிவிருத்தி முன்மொழிவுகள்" என்ற பெயரில் இதுவரை நிர்மாணிக்கப்பட்டுள்ள எனினும் எவ்வித பயன்பாடுகளுக்கும் உட்படுத்தப்படாத அனைத்து கட்டிடங்களையும் மக்கள் பயன்பாட்டிற்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல்
வெளிநாட்டு உதவி அல்லது வெளிநாட்டுக் கடனுதவி அடிப்படையில் அல்லது மத்திய அரசு அல்லது உள்ளூராட்சி அதிகார சபைகளின் நிதியைச் செலவிட்டு “அபிவிருத்தி முன்மொழிவுகள்” என்ற பெயரில் நாடு முழுவதும் கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் இதுவரை நிர்மாணிக்கப்பட்டு, எனினும் எவ்வித பயன்பாடுகளுக்கும் உட்படுத்தப்படாத அவ்வாறான கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு உபயோகிக்க முடியுமான வகையில் மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் பொருத்தமான முடிவுகளை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரினால் வினாவொன்று கேட்கப்பட்டது:-
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2025 மே 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks