E   |   සි   |  

2025 மே 21ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினவப்படும் வினாக்கள் தொடர்பானது


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் கணக்காய்வு அறிக்கையின் பத்தாவது தொகுதியினது —

•    கறவை மாடு இறக்குமதி செயற்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் II ஆம் பகுதியின் கீழ் 15,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்கான முற்பணம் வழங்குதல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை; மற்றும்
•    2024 சனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் “இளைஞர்களை இன்னல்களிலிருந்து மீட்டெடுத்தல்” என்ற கருப்பொருளின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் மேற்கொள்ளப்பட்ட 6 நிகழ்ச்சித்திட்டங்களின் முறைப்படியான தன்மை, பயனுறுதி மற்றும் மன்றத்தின் முக்கிய நோக்கங்களுடன் இணங்குதல் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கை

(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் கணக்காய்வு அறிக்கையின் எட்டாவது தொகுதியின் ‘அப்பி வெனுவென் அப்பி’ நிதியத்தின் செயலாற்றல் மதிப்பீடு தொடர்பான அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2022 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மனிதவள மேம்பாட்டு நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் வருடாந்த நிதிக் கூற்றுக்கள்.
(ii)    2016, 2017, 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான லக்திவ என்ஜினியரிங் (பிரைவேட்) லிமிட்டட்டின் ஆண்டறிக்கைகள்.
(iii)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஆயுள்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை.
(iv)    2023/2024 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை பொஸ்பேட் நிறுவனத்தின் ஆண்டறிக்கை.
(v)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய ஆராய்ச்சி சபையின் வருடாந்த அறிக்கை.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலங்க யூ. கமகே  - மூன்று மனுக்கள்
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ திசாநாயக்க                    
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நந்தன பத்மகுமார -  நான்கு மனுக்கள்
(v)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுதத் பலகல்ல                    
(vi)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மனோஜ் ராஜபக்ஷ் - இரண்டு மனுக்கள்
(vii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி ஹசாரா லியனகே

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ ரவி கருணாநாயக்க

சமீபத்திய மின்சாரத் தடை மற்றும் சூரிய சக்தி சிக்கல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i)    நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(ii)    நிதிச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்


ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ (செல்வி) சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர
(ii)    கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர


அதனையடுத்து, 1703 மணியளவில் பாராளுமன்றமானது 2025 மே 22ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks