E   |   සි   |  

2025 ஜூன் 03ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

1 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)


சபாநாயகரின் அறிவித்தல்கள்

2 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
3 : “இலங்கை மின்சாரம் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதியொன்று கிடைக்கப் பெறல்
4 : பத்தாவது பாரளுமன்றத்தின் இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பூர்வாங்கக் கூட்டம்
5 : பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிப் பட்டறை


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
•    2022 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாம் தொகுதியின் LXIV ஆம் பகுதியையும்;  மற்றும்
•    2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாம் தொகுதியின் XLIII மற்றும் XLIV ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXV மற்றும் XXVI ஆம் பகுதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2025 மார்ச் 27 ஆம் திகதிய 2429/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(ii)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 20 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 ஏப்ரல் 29 ஆம் திகதிய 2434/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
(iii)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 20 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 மே 05 ஆம் திகதிய 2435/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
(iv)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 24(அ) (1) ஆம் பிரிவின்  கீழ்  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடனான கலந்தாலோசனையின்பேரில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் ஒவ்வாமையியல் மற்றும் நோயெதிர்ப்புச் சக்தியியல் நிறுவகத்தினை நிறுவுதல் மற்றும் அத்தகைய நிறுவகத்துக்கு அப் பெயரையும் பெயர் மகுடத்தினையும் குறித்தளித்தல் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2025 பெப்ரவரி 20 ஆம் திகதிய 2424/58 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(v)    2025 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2025.03.28 முதல் 2025.04.30 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்தி நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு.
(vi)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை.
(vii)    2022/2023 ஆம் ஆண்டுக்கான பிசீசீ லங்கா லிமிடெட்டின் ஆண்டறிக்கை.
(viii)    2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் 3 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படுவதாகிய 34 ஆம் பிரிவின் கீழ் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரால் ஆக்கப்பட்டு 2025 ஏப்ரல் 03 ஆம் திகதிய 2430/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
(ix)    2024 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க, வெளிநாட்டு தீர்ப்புகளைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டத்தின் 2(1) ஆம் பிரிவின் கீழ் மற்றும் 1(2) ஆம் பிரிவின் கீழும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2025 மார்ச் 28 ஆம் திகதிய 2429/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட  கட்டளைகள்.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

விஞ்ஞானம்,  தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (டாக்டர்) ஜனக சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க - இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜந்த கம்மெத்தெகே                    
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ
 (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ சஜித் பிரேமதாச

உள்ளூர் சீனி உற்பத்தி மற்றும் இறக்குமதி

மேற்சொன்ன வினாவுக்கு கௌரவ கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் பதிலளித்தார்.

(ii) கௌரவ சிவஞானம் சிறீதரன்

கிளிநொச்சியிலுள்ள சிலோன் ஜேர்மன் தொழில்நுட்ப நிறுவகத்தில் காணப்படும் வளப் பற்றாக்குறை மற்றும் இதர பிரச்சினைகள்

மேற்சொன்ன வினாவுக்கு கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i)    அரசாங்கங்களுக்கிடையிலான ஒப்பந்தத்தின் கீழ் மருந்து கொள்வனவு செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக 2025.05.09 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் பதிலளித்தார்.
(ii)    உப்பு உற்பத்தி மற்றும் ஆனையிறவு உப்பளம் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக 2025.05.23 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்கள் பதிலளித்தார்.
(iii)    சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் மற்றும் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துதல் தொடர்பான சிக்கல்கள் தொடர்பாக 2025.05.23 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சார்பாக நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும அவர்கள் பதிலளித்தார்.


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா 

தன்னைப் பற்றி கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்கள் தெரிவித்துள்ள தவறான குற்றச்சாட்டு


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i)    வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தம்) - 2016 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(ii)    வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தம்) - 2016 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படிச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(iii)    வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தம்) - 2005 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படிச் சட்டத்தைத் திருத்துவதற்கானது


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயம்)

விவாதிக்கப்பட்டதுடன் எதிர்வரும் தினமொன்றுக்கு ஒத்திவைக்கப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“வெள்ள நிலைமைக்கு தீர்வு காண்பதற்கான அமைப்பொன்றை நிறுவுதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அசித நிரோஷண எகொட வித்தான அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஜூன் 04ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks