பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
புதிய உறுப்பினர்களின் உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்
கெளரவ முகம்மது சரிவு அப்துல் வாஸித் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சனாதிபதியின் செய்திகள்
1 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான "பெண்கள் வலுவூட்டல் குறித்த மாவட்ட அளவிலான முன்னோடித் திட்டம்" குறித்த விழிப்புணர்வு பட்டறை
2 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காம் தொகுதியின் I ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2024 ஆம் ஆண்டுக்கான அரசாங்க விலைமதிப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(ii) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை மதுவரித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(iii) 2024 ஆம் ஆண்டுக்கான அரச நிதித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(iv) 2024 ஆம் ஆண்டுக்கான அரச கணக்குகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(v) 2024 ஆம் ஆண்டுக்கான முகாமைத்துவ கணக்காய்வுத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(vi) 2024 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி நிதித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(vii) 2024 ஆம் ஆண்டுக்கான கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(viii) 2024 ஆம் ஆண்டுக்கான இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(ix) 2024 ஆம் ஆண்டுக்கான தகவல் தொழிநுட்ப முகாமைத்துவ திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(x) 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய வரவுசெலவுத் திட்டத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(xi) 2024 ஆம் ஆண்டுக்கான சட்ட அலுவல்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(xii) 2024 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(xiii) 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(xiv) 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை.
(xv) 2024 ஆம் ஆண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(xvi) 2024 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு சேவை ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை.
(xvii) 2024 ஆம் ஆண்டுக்கான தேர்தல் ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(xviii) 2024 ஆம் ஆண்டுக்கான பகிரங்க சேவை ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(xix) 2024 ஆம் ஆண்டுக்கான சனாதிபதி செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(xx) 2024 ஆம் ஆண்டுக்கான சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் வெகுசன ஊடகப் பிரிவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(xxi) 2024 ஆம் ஆண்டுக்கான அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(xxii) 2018 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு மற்றும் எதிரீட்டுத்தீர்வைகள் சட்டத்தின் 64, 65, 66, 69 மற்றும் 70 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 84 ஆம் பிரிவின் கீழ் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2025 மார்ச் 27 ஆம் திகதிய 2429/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
(xxiii) 2024 ஆம் ஆண்டுக்கான பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(xxiv) 2023 ஆம் ஆண்டுக்கான நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை.
(xxv) 2024 ஆம் ஆண்டுக்கான நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(xxvi) 2024 ஆம் ஆண்டுக்கான இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(xxvii) 2024 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(xxviii) 2024 ஆம் ஆண்டுக்கான பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(xxix) 2024 ஆம் ஆண்டுக்கான கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஹால் அபேசிங்ஹ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன கமகே
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் - இரண்டு மனுக்கள்
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி யூ.பி. அபேவிக்ரம
(v) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் உபுல் கித்சிறி
(vi) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ திசாநாயக்க
(vii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அருண பனாகொட
(viii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த பெரேரா - ஐந்து மனுக்கள்
(ix) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பத்மசிரி பண்டார
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
சர்ச்சைக்குரிய 323 கப்பல் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதற்கான விசாரணை அறிக்கை
மேற்சொன்ன வினாவுக்கு கௌரவ பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பதிலளித்தார்.
(ii) கௌரவ ரவிகருணாநாயக்க
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரச்சினைகள்
மேற்சொன்ன வினாவுக்கு கௌரவ வலுசக்தி அமைச்சர் மற்றும் கௌரவ பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆகியோர் பதிலளித்தனர்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, தேசிய கணக்காய்வுச் சட்டத்தினைத் திருத்துவதற்காக
“தேசிய கணக்காய்வு (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயம்)
சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“மாற்றுத்திறனாளி சமூகத்தை பொருளாதார ரீதியாக உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஜூலை 09ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks