பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
புதிய உறுப்பினர்களின் உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்
கெளரவ உஸ்ஹெட்டிகே தொன் நிசாந்த ஜயவீர அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41எ (1) உறுப்புரையின் பிரகாரம் சனாதிபதிக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புப் பேரவையின் நான்காவது அறிக்கை (2024 ஜூன் முதல் 2024 டிசம்பர் வரையிலான காலப்பகுதிக்கானது)
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2023 ஆம் ஆண்டுக்கான நீதிச் சேவைகள் ஆணைக்குழுச் செயலகத்தின் வருடாந்தச் செயலாற்றுகை அறிக்கை.
(ii) 2024 ஆம் ஆண்டுக்கான இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் வருடாந்தச் செயலாற்றுகை அறிக்கை.
(iii) 2024 ஆம் ஆண்டுக்கான முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(iv) 2024 ஆம் ஆண்டுக்கான வியாபார மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(v) 2024 ஆம் ஆண்டுக்கான அரசிறைக் கொள்கைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(vi) 2024 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் நீர்ப்பாசனப் பிரிவின் வருடாந்தச் செயலாற்றுகை அறிக்கை.
(vii) 2024 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் காணிப் பிரிவின் செயலாற்றுகை அறிக்கை.
(viii) 2024 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கமத்தொழில், கால்நடை வளங்கள் பிரிவு மற்றும் முன்னர் காணப்பட்ட பெருந்தோட்டக் கைத்தொழில் பிரிவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(ix) 2024 ஆம் ஆண்டுக்கான நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வருடாந்தச் செயலாற்றுகை அறிக்கை.
(x) 2024 ஆம் ஆண்டுக்கான கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் வருடாந்தச் செயலாற்றுகை அறிக்கை.
(xi) 2024 ஆம் ஆண்டுக்கான முன்னாள் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் வருடாந்தச் செயலாற்றுகை அறிக்கை.
(xii) 2022 ஆம் ஆண்டுக்கான உணவு ஆணையாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(xiii) 2024 ஆம் ஆண்டுக்கான வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் வருடாந்தச் செயலாற்றுகை அறிக்கை.
(xiv) 2024 ஆம் ஆண்டுக்கான அம்பாறை, கொழும்பு, களுத்துறை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, ஹம்பாந்தோட்டை மொனராகலை, காலி, புத்தளம், மாத்தறை, திருகோணமலை, அனுராதபுரம், பொலொன்னறுவை, யாழ்ப்பாணம், கம்பஹா, கண்டி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, குருநாகல், மாத்தளை, பதுளை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்ட செயலகங்களின் வருடாந்தச் செயலாற்றுகை அறிக்கைகள்.
(xv) 2024 ஆம் ஆண்டுக்கான அரசகரும மொழிகள் திணைக்களத்தின் வருடாந்தச் செயலாற்றுகை அறிக்கை.
(xvi) 2024 ஆம் ஆண்டுக்கான சுற்றாடல் அமைச்சின் வருடாந்தச் செயலாற்றுகை அறிக்கை.
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நஜீத் இந்திக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எரங்க குணசேகர - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டி.வீ. சானக
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சதுர கலப்பத்தி - இரண்டு மனுக்கள்
(v) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா
(vi) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக - இரண்டு மனுக்கள்
(vii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (செல்வி) அம்பிகா சாமிவெல் - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ ரணசிங்ஹ
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.எம். சமந்த ரனசிங்ஹ
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டி.வீ. சானக
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை
(ii) கௌரவ சிவஞானம் சிறீதரன்
யாழ்ப்பாண விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
இறப்பர் கட்டுப்பாட்டுச் சட்டத்தினைத் திருத்துவதற்காக
“இறப்பர் கட்டுப்பாடு (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
ஒத்திவைப்புப் பிரேரணை
“2019.04.21 இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஜூலை 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
1343
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks