பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் அங்குரார்ப்பணக் கூட்டம்
2 : ‘இலங்கையின் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கம் என்பவற்றின் நடவடிக்கைகள்’ குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம், தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ள,
• அரச வங்கிகள் தொடர்பாக கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கையின் பதினோராவது தொகுதியின் 02 ஆம் பகுதி;
• கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் பணியகங்கள் தொடர்பாக கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கையின் பதினோராவது தொகுதியின் 02 ஆம் பகுதி;
• பல்கலைக்கழகங்கள், பட்டப்பின்படிப்பு நிறுவனங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் தொடர்பாக கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கையின் பதினோராவது தொகுதியின் 02 ஆம் பகுதி;
• நியதிச்சட்ட மற்றும் ஏனைய நிதியங்கள் தொடர்பாக கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கையின் பதினோராவது தொகுதியின் 02 ஆம் பகுதி; மற்றும்
• அரச கம்பனிகள் தொடர்பாக கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கையின் பதினோராவது தொகுதியின் 09 ஆம் பகுதி
2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுகள் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் பிரகாரம்
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம், தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ள,
• சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பாக கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கையின் பதினோராவது தொகுதியின் 01 ஆம் பகுதி;
• திணைக்களங்கள் தொடர்பாக கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கையின் பதினோராவது தொகுதியின் 01 ஆம் பகுதி;
• பிரதேச செயலகங்கள் தொடர்பாக கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கையின் பதினோராவது தொகுதியின் 01 ஆம் பகுதி;
• அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் தொடர்பாக கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கையின் பதினோராவது தொகுதியின் 01 ஆம் பகுதி;
• வெளிநாட்டு நிதியீட்ட செயற்திட்டங்கள் தொடர்பாக கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கையின் பதினோராவது தொகுதியின் 04 ஆம் பகுதி;
• மாகாண சபைகள் தொடர்பாக கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கையின் பதினோராவது தொகுதியின் 05 ஆம் பகுதி;
• உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பாக கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கையின் பதினோராவது தொகுதியின் 06 ஆம் பகுதி; மற்றும்
• சுற்றாடல் கணக்காய்வு மற்றும் செயலாற்றுகை கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் மூன்றாண்டு அறிக்கையின் பதினோராவது தொகுதி
2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுகள் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் பிரகாரம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2023 ஆம் ஆண்டுக்கான ரணவிரு சேவா அதிகாரசபையின் ஆண்டறிக்கை.
(ii) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கைச் சுங்கத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(iii) 2024 ஆம் ஆண்டுக்கான தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(iv) 2024 ஆம் ஆண்டுக்கான அரச தொழில் முயற்சிகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(v) 2024 ஆம் ஆண்டுக்கான நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை.
(vi) 2024 ஆம் ஆண்டுக்கான கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(vii) திருத்தப்பட்டவாறான 1999 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க, புகையிலை வரிச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் பீடிக்கான வரியொன்றினை விதித்தல் தொடர்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2025 ஏப்ரல் 01 ஆம் திகதிய 2430/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(viii) 2024 ஆம் ஆண்டுக்கான போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(ix) 2024 ஆம் ஆண்டுக்கான அரசாங்க தகவல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(x) 2024 ஆம் ஆண்டுக்கான கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(xi) 1959 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, தேயிலை (வரி மற்றும் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு) சட்டத்தின் 7(1) மற்றும் 8(2) ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 15 ஆம் பிரிவின் கீழ் இலங்கைத் தேயிலைச் சபையின் தவிசாளரினால் ஆக்கப்பட்டு, 2023 ஆகஸ்ட் 05 ஆம் திகதிய 2343/63 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xii) 2024 ஆம் ஆண்டுக்கான உரிமைகள் காப்புறுதி நிதியத்தின் செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்குகள்.
(xiii) 2024 ஆம் ஆண்டுக்கான பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்குகள்
(xiv) 2024 ஆம் ஆண்டுக்கான சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் வருடாந்தச் செயலாற்றுகை அறிக்கை.
(xv) 2024 ஆம் ஆண்டுக்கான உயர் நீதிமன்றப் பதிவாளரின் செயலாற்றுகை அறிக்கை.
(xvi) 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, நீதித்துறைச் சட்டத்தின் 45 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 61 ஆம் பிரிவின் கீழ் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2025 யூன் 04 ஆம் திகதிய 2439/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xvii) 2022 ஆம் ஆண்டுக்கான நீர் வளச் சபையின் வருடாந்த அறிக்கை.
(xviii) 2023 ஆம் ஆண்டுக்கான அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(xix) 2024 ஆம் ஆண்டுக்கான முன்னாள் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நாமல் சுதர்சன
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அருண் ஹேமச்சந்திரா
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அநுராத ஜயரத்ன
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசனாயக
(v) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ (vi) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர - இரண்டு மனுக்கள்
(vii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ கே. காதர் மஸ்தான்
அரசாங்க மொழிபெயர்ப்பாளர்கள் சேவையிலுள்ள சிக்கல்கள்
(ii) கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா
அரச பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியாகும் பட்டாதிரிகளுக்கான வேலைவாய்ப்ப்பு
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்தியர் கஸ்தூரி ஜீவகனின் இடமாற்றம் தொடர்பாக 2025.03.11 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு சுகாதாரம் அமைச்சர் கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
குடியியல் மற்றும் வர்த்தக பிணக்குகளின் மத்தியஸ்திற்காகவும்; 2000 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க, இலங்கை வர்த்தக மத்தியஸ்த நிலையச் சட்டத்தினை நீக்குவதற்காகவும்; அவற்றோடு தொடர்புபட்ட அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்காகவும் ஏற்பாடுசெய்வதற்காக
“மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2, 14 மற்றும் 4ஆம் விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன:-
• கிராமிய கூட்டுறவு வங்கிக் கட்டமைப்பை உரிய முறையில் மேற்பார்வை செய்வதற்கான வேலைத் திட்டமொன்றைத் தயாரித்தல்
மக்களுக்கு மிக நெருக்கமான பல கிராமிய கூட்டுறவு வங்கிகள் கடந்த காலப்பகுதியில் பல்வேறு காரணங்களால் வீழ்ச்சியடைந்தமையின் அடிப்படையில் அதன் வைப்பாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதால், அந்த நிலைமையைத் தவிர்ப்பதற்காக அவ்வங்கிகளை அரசாங்கம் உரிய முறையில் மேற்பார்வை செய்ய வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• இலங்கை வெளிநாட்டு சேவைக்கான நியமனங்கள் வழங்கப்படுவதை முறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்
இலங்கையின் நற்பெயரை சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் மேலோங்கச் செய்யும் வெளிநாட்டு சேவைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அரசியல் நியமனங்கள் காரணமாக அச்சேவையின் தரம் வீழ்ச்சியடைந்து எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போயிருப்பதால் அந்த நிலைமையைத் தவிர்க்கும் வகையில், வெளிநாட்டு சேவைக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நியமனங்களையும் போட்டிப் பரீட்சை பெறுபேறுகள் மற்றும் திறமையின் அடிப்படையில் மேற்கொள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் தயாரிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• ஒவ்வொரு இளைஞரையும் போதுமான வருமானத்தை ஈட்டும் தொழிலைக் கொண்டிருக்கும் ஆளாக அல்லது சுய தொழில்புரியும் தொழில்முனைவோராக மாற்றுதல்
18 வயதை அடைந்த ஒவ்வொரு இளைஞருக்கும் போதிய வருமானமீட்டும் தொழிலைக் கொண்டிருப்பதற்கான உரிமை இருக்க வேண்டும் அல்லது தொழில்புரியாது இருப்பின், சுய தொழில்புரியும் தொழில்முனைவோராக மாற்றுவதற்கான நிதியுதவி வழங்கப்படுதல் வேண்டும் என இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ஒஷானி உமங்கா
அதனையடுத்து, 1518 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஜூலை 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks