E   |   සි   |  

2025 ஜூலை 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வு
2 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

(i)    2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 5 உடன் படிக்கப்படும் பிரிவு 3(d) மற்றும் 3(e) இன் கீழ், அவரது பதவியின் தவறான நடத்தை மற்றும் மொத்த அதிகார துஷ்பிரயோகத்திற்காக, பொலிஸ் மா அதிபர் திரு. டி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக, 2025 ஏப்ரல் 08 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை, சபையின் விசேட அனுமதியுடன் ஆங்கில மொழியில் மாத்திரம்

(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─
•    2020 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LXII ஆம் பகுதியையும்;
•    2021 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LXI ஆம் பகுதியையும்; 
•    2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் XIX ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXVIII ஆம் பகுதியையும்; மற்றும்
•    2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் II ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை.
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை.
(iii)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(iv)    பொதுத் தனிசு ஒருங்கிணைத்தற் குழுவின் விதப்புரையின் மீது, இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் உறுப்புரை 44(3) மற்றும் 2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் 19, 20, 21, 22 மற்றும் 23 உடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 35 ஆம் பிரிவின் கீழ், சனாதிபதியால் ஆக்கப்பட்டு, 2025 யூன் 30 ஆம் திகதிய 2443/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
(v)    2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நீரியல்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்.
(vi)    2022 ஆம் ஆண்டுக்கான லங்கா சதொச லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை.
(vii)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஒத்தியல்பு மதிப்பீட்டிற்கான தராதர அங்கீகார சபையின் வருடாந்த அறிக்கை.
(viii)    2024 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு ஊழியர் சேவை ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(ix)    2023/2024 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை.
(x)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை.
(xi)    2023 ஆம் ஆண்டுக்கான சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டேமினல்ஸ் லிமிடெட்டின் ஆண்டறிக்கை.
(xii)    2023 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை நிலக்கரி (தனியார்) நிறுவனத்தின் ஆண்டறிக்கை.
(xiii)    2024 ஆம் ஆண்டுக்கான வலுசக்தி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(xiv)    2024 ஆம் ஆண்டுக்கான சிறைச்சாலைகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(xv)    1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, நீதித்துறைச் சட்டத்தின் 45 (1அ) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 61 ஆம் பிரிவின் கீழ் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் ஆக்கப்பட்டு,  2025 யூன் 13 ஆம் திகதிய 2440/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் நிபுண ஆரச்சி - மூன்று மனுக்கள் 
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க - இரண்டு மனுக்கள் 
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லால் பிரேமநாத்
 (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ சஜித் பிரேமதாச

மனித – யானை மோதல்

கௌரவ சுற்றாடல் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.

(ii) கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான படகு சேவை

கௌரவ துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


சிறப்புரிமைக் கேள்விகள்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சி  

காவல்துறையினருடன் தனக்கு ஏற்பட்ட நிலைமை

(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே  

ஹன்தான காணிகள் தொடர்பில் அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தவறான குற்றச்சாட்டு


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன அவர்களுக்கு “காணி அபிவிருத்தி (திருத்தம்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் நிறைவேற்றப்பட்டன:-
(i)    வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் - வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 181; எதிராக 0)
(ii)    வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் - வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 188; எதிராக 0)
(iii)    வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“சர்க்கரை நிறுவனங்களின் ஊழியர்கள் எதிர்கொள்ளும் குறைபாடுகள்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1855 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஜூலை 23ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks