E   |   සි   |  

2025 ஜூலை 24ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எரங்க குணசேகர அவர்கள் எழுப்பிய சிறப்புரிமை விடயம்
2 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மற்றும் தெரிவுக் குழு ஆகியவற்றின் கூட்டங்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற் கல்வி ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை.
(ii)    2024 ஆம் ஆண்டுக்கான கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் (இதழ் I - பொதுக் கல்வி, இதழ் II - உயர் கல்வி மற்றும் இதழ் III - தொழிற் கல்வி) வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(iii)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்.
(iv)    2024 ஆம் ஆண்டுக்கான செலவினத் தலைப்பு இல.04 - உயர் நீதிமன்ற நீதியரசர்களின் செயலாற்றுகை அறிக்கை.
(v)    2024 ஆம் ஆண்டுக்கான சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(vi)    2025 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2025.06.01 முதல் 2025.06.30 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்தி நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு.
(vii)    2021/2022 ஆம் ஆண்டுக்கான பீ சீ சீ லங்கா லிமெிடெட்டின் ஆண்டறிக்கை.
(viii)    2021/2022 மற்றும் 2022/2023 ஆண்டுகளுக்கான தேசிய உப்பு நிறுவனத்தின் ஆண்டறிக்கைகளும் கணக்குகளும்.
(ix)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் ஆண்டறிக்கை.
(x)    2024 ஆம் ஆண்டுக்கான கடன் இணக்க சபைத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(xi)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை பொலிஸின் செயலாற்றுகை அறிக்கை.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    வர்த்தக, வாணிப,உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ ஆர்.எம். ஜயவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் மூன்றாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஷாந்த சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் அகலகட   -  இரண்டு மனுக்கள் 
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) (செல்வி) கெளஷல்யா ஆரியரத்ன            (iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி                    
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ -  இரண்டு மனுக்கள் 
(v)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர - நான்கு மனுக்கள்
 (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ கே. காதர் மஸ்தான்

வடக்கில் பாதுகாக்கப்பட்ட காணிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காணிகள்

(ii) கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன்

மன்னாரில் அரச மருந்தக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையமொன்றினை திறத்தல்

கௌரவ சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன  

தனது தந்தைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு


ஒத்திவைப்புப் பிரேரணை

“முன்மொழியப்பட்டுள்ள கல்வி சீர்திருத்தம்” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவண் விஜேவீர அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1802 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஜூலை 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks