பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
2 : வழிவகைகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
3 : கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா அவர்கள் எழுப்பிய சிறப்புரிமை விடயம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை முதலீட்டுச் சபையின் வருடாந்த அறிக்கை.
(ii) 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை.
(iii) 2023 ஆம் ஆண்டுக்கான அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஆண்டறிக்கை.
(iv) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(v) 2024 ஆம் ஆண்டுக்கான விவசாயத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(vi) தேசிய அரச பேரவையின் 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, விளையாட்டுக்கள் சட்டத்தின் 31 ஆவது பிரிவுடன் சேர்த்து வாசிக்க வேண்டிய 41 ஆவது பிரிவின் கீழ் இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 மே 21 ஆம் திகதிய 2437/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(vii) 2024 ஆம் ஆண்டுக்கான விழிப்புலனற்ற நபர்களின் நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(viii) 2024 ஆம் ஆண்டுக்கான பௌத்த அலுவல்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ முனீர் முலாபர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் இரண்டாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கே. சுஜித் சஞ்ஜய பெரேரா - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி யூ.பி. அபேவிக்ரம
(v) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே
(vi) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க
(vii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பலிஹேன - இரண்டு மனுக்கள்
(viii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம
(ix) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஷாந்த சமரவீர
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
மருந்தாளர்களின்பற்றாக்குறை, ஆட்சேர்ப்பு, உரிமம் புதுப்பித்தல் போன்றவை.
கௌரவ சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ ரவி கருணாநாயக்க
பணவீக்க இலக்குகளை அடைய மத்திய வங்கி தவறிவிட்டமை
கௌரவ பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தனது பாராளுமன்ற சிறப்புரிமை மீறல் தொடர்பாக புகார் அளித்தல்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
அரச மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு தொடர்பாக 2025.06.19 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் பதிலளித்தார்.
சிறப்புரிமைகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எரங்க குணசேகர அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2025 ஏப்ரல் 08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
அனுதாபப் பிரேரணைகள்
பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-
(i) மறைந்த கௌரவ ராஜவரோதயம் சம்பந்தன்
(ii) மறைந்த கௌரவ ஏ. பிலபிற்றிய
(iii) மறைந்த கௌரவ டபிள்யு.பீ. ஏக்கநாயக்க
(iv) மறைந்த கௌரவ லக்கி ஜயவர்தன
(v) மறைந்த கௌரவ (திருமதி) மாலனீ பொன்சேக்கா
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசனாயக
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த ஜயவீர
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஆகஸ்ட் 05ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks