பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : இணைந்த விசேட பொதுக் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2020 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட சீநோர் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை.
(ii) 2024 ஆம் ஆண்டுக்கான விஞ்ஞான மற்றும் தொழினுட்ப அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(iii) 2023 ஆம் ஆண்டுக்கான பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(iv) 2024 ஆம் ஆண்டுக்கான புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரத்ன - மூன்று மனுக்கள்
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லால் பிரேமநாத் - இரண்டு மனுக்கள்
(v) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட
(vi) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி ஹசாரா லியனகே - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ கே. காதர் மஸ்தான்
இலங்கை சுங்கத்தினால் புனித அல்-குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பு அடங்கிய ஒரு தொகுதி தடுத்து வைக்கப்பட்டுள்ளமை
(ii) கௌரவ சிவஞானம் சிறீதரன்
பலாலி விமானநிலைய அபிவிருத்தி வேலை
மேற்சொன்ன வினாவிற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி உரிமங்களை வழங்குவது தொடர்பான கூற்றொன்றினை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் முன்வைத்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i) சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலம்
(ii) இறப்பர் கட்டுப்பாடு (திருத்தச்) சட்டமூலம்
(iii) விளையாட்டுக்கள் சட்டத்தின் கீழ் கட்டளை
(iv) நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன எகொட விதான
அதனையடுத்து, 1743 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஆகஸ்ட் 21ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks