பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : “சனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
2 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —
• 2022 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XLIV ஆம் பகுதியையும்;
• 2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLVII ஆம் பகுதியையும்; மற்றும்
• 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் II மற்றும் III ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் II ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசிற்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையில் முதலீடுகளை மேம்படுத்துதல் மற்றும் பரஸ்பர பாதுகாப்பு குறித்து 2025 பெப்ரவரி 12 ஆம் திகதி செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம்.
(ii) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்.
(iii) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை விமானப் படையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(iv) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை புகையிரத திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(v) 2022/2023 ஆம் ஆண்டுக்கான கஹடகஹ கிறபைட் லங்கா லிமிடெட்டின் ஆண்டறிக்கை.
(vi) 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச பொறியியற் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை.
(vii) 2023 ஆம் ஆண்டுக்கான ஓஷன் வியூ டெவலப்மெண்ட் கம்பெனி (பிரைவேட்) லிமிடெட்டின் ஆண்டறிக்கை.
(viii) 2024 ஆம் ஆண்டுக்கான இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) போக்குவரத்து,நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அனுர கருணாதிலக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டப்ளியூ.எச்.எம். தர்மசேன
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சதுர கலப்பத்தி
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ - இரண்டு மனுக்கள்
(v) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பத்மசிரி பண்டார
(vi) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்க ரங்கனாத்
(vii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலிண சமரகோன்
(viii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஷாந்த சமரவீர
(ix) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ ரவி கருணாநாயக்க
இலங்கை மீதான அமெரிக்க வரி விதிப்பால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள்
(ii) கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன்
தலைமன்னார் ராமேஸ்வரத்தில் இயக்கப்படும் படகு சேவைகளின் விவரங்கள்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(ii) உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
(iii) நிதிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி
(iv) நிர்மாணத்தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான வழிகாட்டுதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ஒஷானி உமங்கா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஆகஸ்ட் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks