E   |   සි   |  

2025 ஆகஸ்ட் 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2021 ஆம் ஆண்டுக்கான  இலங்கை திரிபோஷ லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை.
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனை மற்றும் முதுகலை பயிற்சி மையத்தின் ஆண்டறிக்கை.
(iii)    2020 ஆம் ஆண்டுக்கான கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(iv)    2020 ஆம் ஆண்டுக்கான பனை அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை. 
(v)    2025 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு.
(vi)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை நீதிபதிகள் நிறுவகத்தின் ஆண்டறிக்கை.
(vii)    2025 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தற்காலிகத் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரஊப் ஹகீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எரங்க குணசேகர  - இரண்டு மனுக்கள் 
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க                    
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி யூ.பி. அபேவிக்ரம 
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க  
(v)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரியாஸ் பாருக் - மூன்று மனுக்கள் 
(vi)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கஞ்சன வெலிப்பிட்டிய
 (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ ரவி கருணாநாயக்க

புலம்பெயர்ந்த அரச பல்கலைக்கழக பட்டதாரிகளின் விபரங்கள்

(ii) கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன்  

வன்னி மாவட்டத்தில் புல்வெளி பற்றாக்குறையால் கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்

மேற்சொன்ன வினாவிற்கு காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

குத்தகை நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துதல் தொடர்பாக 2025.08.06 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் போது கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் பதிலளித்தார்.


ஒத்திவைப்புப் பிரேரணை

“இந்நாட்டில் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1754 மணியளவில் பாராளுமன்றமானது 2025 செப்டெம்பர் 09ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks