E   |   සි   |  

2025 செப்டம்பர் 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
2 : பின்வரிசைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
3 : பொது மனுக்கள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
4 : பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான தீர்ப்பு


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 31(1)(ஆ) ஆம் பிரிவின் பிரகாரம், இலஞ்சம் அல்லது ஊழலுக்கெதிரான சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டு, நிதி எனும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் அவதானிப்புகளுடன் சமர்ப்பிக்கப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழலுக்கெதிரான சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடு


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023 ஆம் ஆண்டுக்கான களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(iii)    2024 ஆம் ஆண்டுக்கான ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iv)    2024 ஆம் ஆண்டுக்கான நிருவாக மேன்முறையீடுகள் நியாய சபையின் செயலாற்றுகை அறிக்கை
(v)    2023 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி சேவையின் ஆண்டறிக்கை
(vi)    2024 ஆம் ஆண்டுக்கான தபால் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vii)    2024 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(viii)    2023 ஆம் ஆண்டுக்கான கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ix)    2022 ஆம் ஆண்டுக்கான தேசிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(x)    2022 ஆம் ஆண்டுக்கான நவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(xi)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(xii)    2023 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு நிதியத்தின் வருடாந்த அறிக்கை
(xiii)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை மின்சார சபையின் வருடாந்த அறிக்கை
(xiv)    2024 ஆம் ஆண்டுக்கான சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிறைக்கைதிகள் நலனோம்பல் நிதியத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xv)    2024 ஆம் ஆண்டுக்கான குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ (திருமதி) சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) நந்தன மில்லகல                    
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷண எகொட வித்தான  -  நான்கு மனுக்கள் 
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர                    
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டிஆரச்சி                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

1990 ஆம் ஆண்டு குருக்கள்மடம் கிராமத்தில் 70 முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் கொன்றமை தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு

மேற்சொன்ன வினாவிற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.

(ii) கௌரவ சிவஞானம் சிறீதரன்

பலாலி இராணுவ முகாம் காரணமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்ற செயல்முறை தொடர்பான சிக்கல்கள்

மேற்சொன்ன வினாவிற்கு நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

வடக்கில் பாதுகாக்கப்பட்ட காணிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பாக 2025.07.24 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ கே. காதர் மஸ்தான் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு சுற்றாடல் அமைச்சர் கௌரவ (டாக்டர்) தம்மிக பட்டபெந்தி அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

சனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்) 

இரண்டாம் மதிப்பீட்டின் போது வாக்கெடுப்பிற்கு (ஆதரவாக 151; எதிராக 1) விடப்பட்டதன் பின்னர் சபையினால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்தல்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1747 மணியளவில் பாராளுமன்றமானது 2025 செப்டம்பர் 11ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks