E   |   සි   |  

2025 செப்டம்பர் 12ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் VI ஆம் பகுதியையும், மூன்றாவது தொகுதியின் V மற்றும் VI ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது  தொகுதியின் III மற்றும் XLV ஆம் பகுதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்கள் மூலம் திருத்தி அமைக்கப்பட்ட, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆவது பிரிவின் கீழ், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 ஓகத்து 15 ஆம் திகதிய 2449/60 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி - மூன்று மனுக்கள்
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கே.வி. சமந்த வித்யாரத்ன                    
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன கமகே - நான்கு மனுக்கள் 
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அருண் ஹேமச்சந்திரா                    
(v)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டெபனி பிரனாந்து - இரண்டு மனுக்கள்                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ சஜித் பிரேமதாச

ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பான சிக்கல்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் பிற கல்வித் துறை சிக்கல்கள்

(ii) கௌரவ ரவி கருணாநாயக்க

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்புகளின் விபரங்கள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, விளையாட்டில் ஊக்கு பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தைத் திருத்துவதற்காக

“விளையாட்டில் ஊக்கு பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயம் (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை கௌரவ இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.


அனுதாபப் பிரேரணைகள்

பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:- 
(i)    மறைந்த கௌரவ பி. தயாரத்ன
(ii)    மறைந்த கௌரவ காமினி லொக்குகே
(iii)    மறைந்த கௌரவ இந்திரதாச ஹெட்டிஆரச்சி
(iv)    மறைந்த கௌரவ எம்.எச். சேஹு இஸ்ஸதீன்
(v)    மறைந்த கௌரவ டபிள்யூ.பீ. ரணதுங்க


அதனையடுத்து, 1556 மணியளவில் பாராளுமன்றமானது 2025 செப்டம்பர் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks