பார்க்க

E   |   සි   |  

2025 செப்டம்பர் 25ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

1 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)


சபாநாயகரின் அறிவித்தல்கள்

2 : பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான தீர்ப்பு
3 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023 ஆம் ஆண்டுக்கான வவுனியாப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை.
(ii)    2025 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2025.08.01 முதல் 2025.08.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்திச் செயற்பாடுகள் நிகழ்ச்சித்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு.
(iii)    2025 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே            
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான்                    
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டெபனி பிரனாந்து -   ஆறு மனுக்கள் 
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லால் பிரேமநாத்                    
(v)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க -  இரண்டு மனுக்கள் 
(vi)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ - இரண்டு மனுக்கள் 
 (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

உள்ளூராட்சி மன்றங்களின் நிதிப் பற்றாக்குறை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்

மேற்சொன்ன வினாவிற்கு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.

(ii) கௌரவ சிவஞானம் சிறீதரன்

புதிய கல்வியியல் பாடத்திட்ட சீர்திருத்தங்கள் குறித்த விபரங்கள்

மேற்சொன்ன வினாவிற்கு கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

நா உயன மடாலயத்தில் நடந்த துயரமான ரயில் தள்ளுவண்டி விபத்து தொடர்பான கூற்றொன்றினை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி அவர்கள் முன்வைத்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்) 

சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“மின்சாரக் கட்டணத்தைக் குறைத்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1739 மணியளவில் பாராளுமன்றமானது 2025 செப்டம்பர் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks