பார்க்க

E   |   සි   |  

2025 செப்டம்பர் 26ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —
•    2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLIX ஆம் பகுதியையும்; மற்றும் 
•    2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் IX மற்றும் X ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் VII மற்றும் VIII ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் V ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை வங்கியின் ஆண்டறிக்கை.
(ii)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு பற்றிய விடயம் தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை.
(iii)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் பற்றிய விடயம் தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் நிஹால் கலப்பத்தி - நான்கு மனுக்கள் 
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் நிபுண ஆரச்சி                    
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஞ்ஜுள சுரவீர ஆரச்சி                    
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன்திலக்க ஜயகொடி  -  இரண்டு மனுக்கள் 
(v)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிரி பஸ்நாயக்க                    
(vi)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கஞ்சன வெலிப்பிட்டிய   -   இரண்டு மனுக்கள் 
 (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ ரவி கருணாநாயக்க

சீனித் தொழிற்துறையிலுள்ள பிரச்சினைகள்

(ii) கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக தனியார் நிலங்களை இராணுவம் கையகப்படுத்துவது தொடர்பான பிரச்சினைகள்

மேற்சொன்ன வினாவிற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i)    மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை-மிரிகம பிரிவின் கட்டுமானம் தொடர்பான கூற்றொன்றினை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் முன்வைத்தார்.
(ii)    யாழ்ப்பாணத்தில் திஸ்ஸ ரஜ மஹா விகாரையின் அமைவிடம் தொடர்பாக 2025.03.06 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் போது கௌரவ சிவஞானம் சிறீதரன் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

2026 ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்தகைய சேவையின் நோக்கத்திற்காக இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ கடன்களைத் திரட்டுவதற்கு அதிகாரமளிப்பதற்கும்; அந்நிதியாண்டின் போது அரசாங்கத்தின் குறித்த சில செயற்பாடுகள் தொடர்பில் நிதி ஏற்பாட்டைச் செய்வதற்கும்; அத்தகைய செயற்பாடுகளின் மீதான செலவினத்திற்கு அந்நிதியாண்டின்போது தேவைப்படும் பணங்களைத் திரட்டு நிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்திற்குரிய அல்லது அதன் கையாளுகையிலுள்ள வேறேதேனும் நிதியத்திலிருந்து அல்லது பணங்களிலிருந்து முற்பணங்கள் என்ற வகையாக கொடுப்பனவை இயலச் செய்வதற்கும்; திரட்டு நிதியத்திற்கு அத்தகைய பணங்களை மீளளிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும், அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக

“ஒதுக்கீடு”

எனும் சட்டமூலத்தினை கௌரவ நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 137 இன் பிரகாரம், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 120 இனைத் திருத்துவதற்கான பிரேரணை (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்) 

சபையில் பிரேரிக்கப்பட்டு நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவின் நான்காவது அறிக்கை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஷாந்த சமரவீர அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஒக்டோபர் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks