பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XI ஆம் பகுதியையும் மற்றும் மூன்றாம் தொகுதியின் IX ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2024 ஆம் ஆண்டுக்கான மக்கள் வங்கியின் ஆண்டறிக்கை
(ii) 2024 ஆம் ஆண்டுக்கான சுகாதார அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் விலைகுறித்தல் குழுவினதும், 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் தாபிக்கப்பட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினதும் மற்றும் எல்லா அக்கறைகொண்டுள்ளோரினதும் கலந்தாலோசனையுடனும் மற்றும் 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் ஏற்பாடுகளுட்பட இயைபான வேறெல்லாக் காரணிகளையும் கவனத்துட்கொண்டும் 2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் 118(4) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 142 ஆம் பிரிவின் கீழ் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 யூலை 21 ஆம் திகதிய 2446/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(iv) 2022/2023 ஆம் ஆண்டுக்கான வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியின் வருடாந்த அறிக்கை
(v) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நீர்ப்பாசன அமைச்சு மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் பற்றிய விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்
(vi) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு பற்றிய விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம் பற்றிய விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (செல்வி) லக்மாலி ஹேமசந்திர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வடகல
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த பெரேரா - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லால் பிரேமநாத்
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம - இரண்டு மனுக்கள்
(v) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிரி - இரண்டு மனுக்கள்
(vi) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
நிலைபேறான கடன் முகாமைத்துவத்திற்கான அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட உத்திகள்
(ii) கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன்
வட மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடலோர உட்கட்டமைப்பு அபிவிருத்தி போன்றவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
மேற்சொன்ன வினாவிற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
முன்னாள் சனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பான கூற்றொன்றினை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கௌரவ ஆனந்த விஜேபால அவர்கள் முன்வைத்தார்.
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கான பணிப்பாளர் நாயகத்தின் நியமனம்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையில் பிரேரிக்கப்பட்டன. (i) ஆம் இலக்க விடயம் நிறைவேற்றப்பட்டதுடன் (ii) ஆம் இலக்க விடயம் நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.: -
(i) விளையாட்டில் ஊக்கு பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம்
(ii) பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 137 இன் பிரகாரம், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119 இனைத் திருத்துவதற்கான பிரேரணை
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் அப்துல் வாசித்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசோக குணசேன
அதனையடுத்து, 1737 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஒக்டோபர் 8ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks