பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
2 : கௌரவ (திருமதி) சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
3 : பாராளுமன்றத்தில் நவராத்திரி விழா
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ என்னும் பிரிவுடன் சேர்த்துவாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், பெனடிக்ட் XVI கத்தலிக் இன்டர்நஷனல் இன்ஸிரிரியுற் ஒப் ஹயர் எடியுகேஷனினால் வழங்கப்படும் உளவியல் ஆலோசனையில் விஞ்ஞான இளமாணி சிறப்பு பட்டம் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 மே 28 ஆம் திகதிய 2438/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ என்னும் பிரிவுடன் சேர்த்துவாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், சினெக் கெம்பஸ் (பிறைவேட்) லிமிடெட்டினால் வழங்கப்படும் வலயமைப்பு பாதுகாப்பு மற்றும் தடயவியலில் கணினி விஞ்ஞானத்தில் விஞ்ஞான இளமாணி சிறப்பு பட்டம் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 யூன் 18 ஆம் திகதிய 2441/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ், ஸ்ரீலங்கா இன்ஸ்டிடியூட் ஒப் இன்போமேஷன் டெக்னோலொஜி (உத்தரவாதம்) லிமிடெட் - கண்டி கிளையினால் வழங்கப்படும் தகவல் தொழினுட்பத்தில் விஞ்ஞான இளமாணி (சிறப்பு) மற்றும் வணிக நிருவாகத்தில் இளமாணி சிறப்புப் பட்டங்கள் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 யூன் 18 ஆம் திகதிய 2441/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iv) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ், ஸ்ரீலங்கா இன்ஸ்டிடியூட் ஒப் இன்போமேஷன் டெக்னோலொஜி (உத்தரவாதம்) லிமிடெட் - யாழ்ப்பாணக் கிளையினால் வழங்கப்படும் தகவல் தொழினுட்பத்தில் விஞ்ஞான இளமாணி (சிறப்பு) மற்றும் வணிக நிருவாகத்தில் இளமாணி சிறப்புப் பட்டங்கள் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 யூன் 18 ஆம் திகதிய 2441/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நந்தன பத்மகுமார
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நந்த பண்டார
(v) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார
(vi) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரியந்த விஜேரத்ன
(vii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான
(viii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலிண சமரகோன்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி ஹசாரா லியனகே
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்ரிய விஜேசிங்ஹ
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ ரவி கருணாநாயக்க
இலங்கையினுள் போதைப்பொருளினை ஒழித்தல்
(ii) கௌரவ கே. காதர் மஸ்தான்
வாகன எண் தகடுகள் வழங்காததால் அரச பாதுகாப்பு மற்றும் இதரவைக்கான அச்சுறுத்தல்
மேற்சொன்ன வினாவிற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) புலம்பெயர்ந்த அரச பல்கலைக்கழக பட்டதாரிகளின் விபரங்கள் தொடர்பாக 2025.08.22 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் பதிலளித்தார்.
(ii) காங்கேசந்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பாக 2025.07.23 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சிவஞானம் சிறீதரன் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் பதிலளித்தார்.
(iii) அரசாங்க மொழிபெயர்ப்பாளர்கள் சேவையிலுள்ள சிக்கல்கள் தொடர்பாக 2025.07.11 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ கே. காதர் மஸ்தான் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
குறைநிரப்புத் தொகை — செலவினத் தலைப்பு 117 — நிகழ்ச்சித்திட்டம் 02 (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)
சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“திருகோணமலையில் இலங்கை துறைமுக அதிகாரசபையால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை மக்களிடம் விடுவித்தல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1735 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஒக்டோபர் 9ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks