பார்க்க

E   |   සි   |  

2025 ஒக்டோபர் 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : 2025 ஒக்டோபர் 7 ஆம் திகதி கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம் தொடர்பான தீர்ப்பு


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

A.    
(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2024 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் X, XI, XII, XIII, XIV மற்றும் XV ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் V ஆம் பகுதியையும் மற்றும் ஆறாவது தொகுதியின் I, II, III மற்றும் IV ஆம் பகுதி
(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் கணக்காய்வு அறிக்கையின் பத்தாவது தொகுதியினது —
•    குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் இணையவழி ஊடாக வீசா வழங்கும் முறைமை தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை;
•    கடமையை விட்டுச் சென்ற அரச மருத்துவ உத்தியோகத்தர்களிடமிருந்து அரசிற்கு அறவிட வேண்டிய நிலுவை தொகை மற்றும் வெளிநாட்டு பயிற்சியை பெற்ற நிபுணத்துவ மருத்துவ உத்தியோகத்தர்களை இணைப்பது தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை; மற்றும்
•    2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளின் மருந்து தேவைப்பாடு, பெறுகைகள், வழங்கல், பகிர்ந்தளித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை (இரண்டாம் பகுதி)

B.    
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —
•    2020 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LXIII ஆம் பகுதியையும்;  
•    2022 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LXVI ஆம் பகுதியையும்; 
•    2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLVIII ஆம் பகுதியையும்; மற்றும் 
•    2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் VIII, XII, XIII, XIV மற்றும் XV ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் X, XI, XII மற்றும் XIII ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் VI மற்றும் VII ஆம் பகுதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(iii)    2024 ஆம் ஆண்டுக்கான வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ ஆர்.எம். காமிணி ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன கமகே - மூன்று மனுக்கள் 
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா                    
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. எம். அஸ்லம்                    
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி - இரண்டு மனுக்கள் 
(v)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஈ.எம். பஸ்நாயக                    
(vi)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்க ரங்கனாத் -  மூன்று மனுக்கள் 
(vii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கஞ்சன வெலிப்பிட்டிய
 (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ சஜித் பிரேமதாச

அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் அரச பாடசாலைகளின் கல்வியியல் ஊழியர்கள் தொடர்பான பிரச்சினைகள்

(ii) கௌரவ ரவி கருணாநாயக்க

இரத்தினம் மற்றும் ஆபரணத் துறை தொடர்பான பிரச்சினைகள்


சிறப்புரிமைகள்

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நலின் ஹேவகே அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2025 ஜூலை 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1, 3 முதல் 6 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன:-

•    ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லல்

ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதன் நன்மைகள் இரத்தினபுரி மாவட்டத்திற்கு மாத்திரமன்றி பதுளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் மக்களுக்கும் கிடைக்கப்படுவதால் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில்கூட அதிகமான நன்மைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய இக்கருத்திட்டத்தினை கட்டம் கட்டமாகவேனும் நடைமுறைப் படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

•    பிட்டிகல, உடுகம, நெலுவை மற்றும் தெனியாய ஆகிய நகரங்கள் அமைந்துள்ள சூழல் கட்டமைப்பை சுற்றுலா வலயமாக பிரகடனப்படுத்தல்

இலங்கை ஒரு புதிய மறுமலர்ச்சியை நோக்கி நகர்ந்துள்ள இச்சந்தர்ப்பத்தில், நாட்டின் சுற்றுலாத்துறை உள்நாட்டு வருமானத்தை அதிகரிப்பதற்கு ஏதுவாக உள்ளதாலும், இலங்கையின் தாழ்நில மழைக்காடுகளில் உலக மரபுரிமையாக விளங்கும் சிங்கராஜ வனமும்,  விசேட விலங்குகள் மற்றும் தாவர இனங்கள் செறிந்து காணப்படும் கன்னெலிய காடு  மற்றும் ஹினிதும மலையை உள்ளடக்கிய மலைத்தொடரின் (ஹேகொக்) உயிரியல் அமைப்புமுறை வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் விசேட கவனத்தை ஈர்த்துள்ள சூழல் தொகுதியாக உள்ளதாலும், இச் சூழல் அமைப்பு முறையைக் கொண்ட பிட்டிகல, உடுகம, நெலுவை மற்றும் தெனியாய ஆகிய நகரங்கள் அமைந்துள்ள சூழல் தொகுதியை சுற்றுலா வலயமாக பிரகடனப்படுத்தி அதனை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

•    பாடசாலைக் கலைத்திட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுக்கவியல் விடயதானங்களை உள்ளடக்குதல்

இந்நாட்டு மக்கள் எதிர்கொள்கின்ற நாளாந்த பிரச்சினைகளுக்கான முக்கிய காரணமாக அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைச் சட்டம் பற்றிய அறியாமை அடையாளம் காணப்பட்டுள்ளதாலும், சட்டம் பற்றிய அறியாமை சட்டத்தின்முன் குற்றமற்றவராக இருப்பதற்கான விடயமாக அமையாததாலும், பாடசாலைக் கலைத்திட்டம் சிக்கலாக அமைவதை தவிர்த்து 6 ஆம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரை பாடசாலை மாணவர்களின் குடியுரிமைக் கல்விப் பாடத்திட்டத்தில் நாட்டின் அடிப்படைச் சட்டம் பற்றிய கற்பித்தலை உள்ளடக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

•    தேசிய மருந்துகள் தர உத்தரவாத ஆய்வுகூடத்தை உரிய முறையில் தொழிற்படவைப்பதற்கான வேலைத் திட்டமொன்றைத் தயாரித்தல்

தேசிய மருந்துகள் தர உத்தரவாத ஆய்வுகூடம் நிறுவப்பட்டு, இன்றளவில் 35 வருடங்கள் கடந்திருப்பதாலும், தற்போது அந்த ஆய்வுகூடம் முறையாக தொழிற்படாததாலும், இறக்குமதி செய்யப்படும் பெருமளவான மருந்துகள் உரிய தரப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படாத நிலை காணப்படுகின்றமையால், அந்நிலையை தவிர்ப்பதற்காக உரிய வேலைத் திட்டமொன்றைத் தயாரிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

•    விவசாயிகளுக்கான காப்புறுதித் திட்டமொன்றை ஆரம்பித்தல்

நாட்டிலுள்ள விவசாயிகளுக்கான நலன்புரித் திட்டங்களை வகுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்குரியது என்பதாலும், இந்நாட்டின் மக்கள் தொகையில் பெருமளவானோர் விவசாயிகள் என்பதாலும் விவசாயிகளுக்கான காப்புறுதித் திட்டமொன்று வகுக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.


ஒத்திவைப்பு பிரேரணை

“சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு” பற்றிய ஒத்திவைப்பு பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அர்ஜுன சுஜீவ சேனசிங்ஹ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஒக்டோபர் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks