E   |   සි   |  

2025 ஒக்டோபர் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : 2025 நவம்பர் 7ஆம் திகதி, வெள்ளிக்கிழமை தினத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பானது


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, இலங்கை மின்சாரச் சட்டத்தின் 18(3) ஆம் பிரிவின் (ஊ) எனும் பந்தியுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 50 ஆம் பிரிவின் கீழ் தன்னார்வ இளைப்பாறுகைத் திட்டத்தின் நியதி நிபந்தனைகள் தொடர்பாக வலுசக்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 ஓகத்து 26 ஆம் திகதிய 2451/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ தர்மப்ரிய விஜேசிங்ஹ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.எம். ஜயவர்தன   -  இரண்டு மனுக்கள் 
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா - இரண்டு மனுக்கள் 
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி சாகரிகா அதாவுத 
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பலிஹேன - இரண்டு மனுக்கள்
 (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ ரவி கருணாநாயக்க

இலங்கையின் டிஜிட்டல் உட்கட்டமைப்பின் சரிவு மற்றும் சைபர் பாதுகாப்பு நெருக்கடி

மேற்சொன்ன வினாவிற்கு டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


ஒத்திவைப்புப் பிரேரணை

“போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒழிப்பதற்கான தேசிய திட்டம் மற்றும் சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துதல்” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்ரிய விஜேசிங்ஹ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1751 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஒக்டோபர் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks