பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : கௌரவ சட்டத்தரணி அரவிந்த செனரத், பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
2 : 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான அழைப்பிதழ்கள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2025 ஆம் ஆண்டின் முதலாவது மற்றும் இரண்டாவது காலாண்டுகளுக்கான நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பணவீக்க இலக்கிலிருந்து முதன்மைப் பணவீக்கத்தின் விலகல் பற்றிய அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் மூன்றாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ கபீர் ஹஷீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) வீ.எஸ். இராதாகிருஷ்ணன்
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
2025 வரவு செலவுத் திட்டத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், பெறப்பட்ட முடிவுகள் போன்றவை.
(ii) கௌரவ ரவி கருணாநாயக்க
பணவீக்க இலக்கை 2% க்கு பதிலாக 5% ஆக நிர்ணயம் செய்ய அரச மற்றும் மத்திய வங்கியின் முடிவு
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) இலங்கையில் நடந்து வரும் மனித உரிமைகள் நிலைமை குறித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகத்தின் அறிக்கை தொடர்பாக 2025.10.08 அன்று பிரதம அமைச்சரிடம் கேட்கப்பட்ட வினாக்களின் கீழ் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் பதிலளித்தார்.
(ii) இரத்தினம் மற்றும் ஆபரணத் துறை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக 2025.10.10 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்கள் பதிலளித்தார்.
அனுதாபப் பிரேரணைகள்
பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-
(i) மறைந்த கௌரவ லொஹான் ரத்வத்தே
(ii) மறைந்த கௌரவ ஹீன்மகத்மயா லியனகே
(iii) மறைந்த கௌரவ டிக்சன் ஜே. பெரேரா
(iv) மறைந்த கௌரவ (கலாநிதி) மேர்வின் டி த சில்வா
(v) மறைந்த கௌரவ வை.ஜீ. பத்மசிரி
(vi) மறைந்த கௌரவ ஆர்.எம்.ஆர். சூலபண்டார
(vii) மறைந்த கௌரவ மாணிக்கவாசகர் கனகசபாபதி ஈழவேந்தன்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“'தியவடன நிலமே' தேர்தலில் பெண் பிரதேச செயலாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குதல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சதுர கலப்பத்தி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1707 மணியளவில் பாராளுமன்றமானது 2025 நவம்பர் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks