E   |   සි   |  

2025 நவம்பர் 14ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : பாராளுமன்றத்திற்கு புறம்பான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொள்ளல்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─
•    2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LII ஆம் பகுதியையும்; மற்றும்  
•    2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXVII, XXVIII மற்றும் XXIX ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XIX மற்றும் XX ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XV மற்றும் XVI ஆம் பகுதிகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க 
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரத்ன                   
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த பெரேரா - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சிவஞானம் சிறீதரன்

யாழ்ப்பாணத்தில் வடமராட்சி கிழக்கு வீதிகளின் பாழடைந்த நிலை

மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தைத் திருத்துவதற்காக

“செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை கௌரவ தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2026) - இரண்டாம்  மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட ஆறாம் நாள்) 
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

ஒதுக்கீட்டுச் சட்டமூல (2026) இரண்டாம் மதிப்பீடு சபையினால் அங்கீகரிக்கப்பட்டது. வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது ஆதரவாக 160 பேரும் எதிராக 42 பேரும் வாக்களித்தனர். 

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2026) முழுப் பாராளுமன்ற குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


அதனையடுத்து, 1828 மணியளவில் பாராளுமன்றமானது 2025 நவம்பர் 15ஆந் திகதி சனிக்கிழமை 0900 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks