பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்பான விடயங்கள் பற்றிய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிருவாக மேன்முறையீடுகள் நியாய சபை தொடர்பான விடயங்கள் பற்றிய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iii) 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய வியாபார முகாமை நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(iv) 2021 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ லங்கா இன்ஸ்டிடியூட் ஒப் பயோ டெக்னொலொஜியின் ஆண்டறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ (திருமதி) சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி யூ.பி. அபேவிக்ரம - மூன்று மனுக்கள்
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அமில பிரசாத்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ கே. காதர் மஸ்தான்
காலாவதியான கடவுச்சீட்டுகளைப் புதுப்பித்தலில் வெளிநாடுவாழ் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்
மேற்சொன்ன வினாவிற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
சிறப்புரிமைகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (டாக்டர்) நிஷாந்த சமரவீர அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2025 நவம்பர் 13 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(i) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2026) - குழு (ஒதுக்கப்பட்ட எட்டாம் நாள்)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 4 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வருவன சபையில் அங்கீகரிக்கப்பட்டன:-
(ii) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஆண்டறிக்கை (2022)
(iii) இலங்கை நீதிபதிகள் நிறுவகத்தின் ஆண்டறிக்கை (2022)
(iv) இலங்கை நீதிபதிகள் நிறுவகத்தின் ஆண்டறிக்கை (2023)
அதனையடுத்து, 1900 மணியளவில் பாராளுமன்றமானது 2025 நவம்பர் 18ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0900 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks