E   |   සි   |  

2025 நவம்பர் 19ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
2 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
3 : சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
4 : ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
5 : உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
6 : கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடத்தை குறித்து விசாரணை செய்வதற்கான விசேட குழுவின் நியமனம்


பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் கீழ் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் பிரகாரம், “மாகாண  சபைத் தேர்தல்கள் (திருத்தம்)” சட்டமூலம் பற்றிய அறிக்கை கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் குமார ஜயகொடி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரீ.கே. ஜயசுந்தர                   
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) நந்தன மில்லகல                   
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-

அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமலும்  2025 மார்ச் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பிரகாரமும், 2024 டிசம்பர் 06 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஆகியவற்றுக்குப் பதிலாக, பின்வரும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் நியமிக்கப்படுமாக.

1. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு,
2.    துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு;  மற்றும்
3.    வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2026) - குழு (ஒதுக்கப்பட்ட பத்தாம் நாள்)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

(ii) கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழு (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

சபையால் அங்கீகரிக்கப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“தனிப்பட்ட பொருளாதார மையங்களை வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாக மாற்றுதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசனாயக அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1902 மணியளவில் பாராளுமன்றமானது 2025 நவம்பர் 20ஆந் திகதி வியாழக்கிழமை 0900 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks