E   |   සි   |  

2025 நவம்பர் 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2024 ஆம் ஆண்டுக்கான தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை          
(ii)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை காணிகள் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்
(iii)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை புடவை மற்றும் ஆடை நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(iv)    2022 ஆம் ஆண்டுக்கான தேசிய விஞ்ஞான மன்றத்தின் ஆண்டறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

முஸ்லிம் தாதிகளின் சீருடையை மாற்ற கோரிக்கை

மேற்சொன்ன வினாவிற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

பொலிஸ் அறிக்கையைப் பெறுவதற்கான நடைமுறை குறித்த ‘அருணா’ பத்திரிகை அறிக்கை தொடர்பான கூற்றொன்றினை சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் முன்வைத்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2026) - குழு (ஒதுக்கப்பட்ட பதினோராம் நாள்)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

(ii) இலங்கை மின்சாரச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

சபையால் அங்கீகரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1827 மணியளவில் பாராளுமன்றமானது 2025 நவம்பர் 21ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0900 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks