E   |   සි   |  

2025 நவம்பர் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : வாய்மூல விடைக்கான வினாக்கள் வழிகாட்டல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்கள் மூலம் திருத்தி அமைக்கப்பட்ட 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆவது பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 20 ஆவது பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 ஒற்றோபர் 24 ஆம் திகதிய 2459/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(ii)    2022/2023 மற்றும் 2023/2024 ஆம் ஆண்டுகளுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை உரக்கம்பனியின் வருடாந்த அறிக்கைகள்
(iii)    2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்தின் வருடாந்த அறிக்கை
(iv)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் ஊவா மாகாண சபை தொடர்பான விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(v)    2024 ஆம் ஆண்டுக்கான ஜய கன்டேனர் டர்மினல்ஸ் லிமிடெட்டின் ஆண்டறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி யூ.பி. அபேவிக்ரம
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா

புத்தளம் ஆதார வைத்தியசாலை தொடர்பான விபரங்கள்

மேற்சொன்ன வினாவிற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2026) - குழு (ஒதுக்கப்பட்ட பன்னிரெண்டாம் நாள்)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் உப்பு உற்பத்திக்கான வசதிகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1815 மணியளவில் பாராளுமன்றமானது 2025 நவம்பர் 22ஆந் திகதி சனிக்கிழமை 0900 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks