பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : ஒழுங்குப் பத்திரத்தில் வாய்மூல விடைக்கான வினாக்களை நிரலிடுவது தொடர்பாக
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXX (30) ஆம் பகுதியையும், மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XVII (17) ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
பொதுத் தனிசு ஒருங்கிணைத்தல் குழுவின் விதப்புரை மீது 2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் பிரிவுகள் 6(ஆ), (இ) மற்றும் (ஒ), 16 மற்றும் 31 என்பவற்றுடனும் மற்றும் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 44(3) ஆம் உட்பிரிவிற்கான காப்புவாசகத்துடனும் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 35 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதியினால் ஆக்கப்பட்டு, 2025 ஒற்றோபர் 24 ஆம் திகதிய 2459/52 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ஹேமாலி வீரசேகர - ஐந்து மனுக்கள்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி ஹசாரா லியனகே
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ கே. காதர் மஸ்தான்
கல்வி வழங்குவதில் சமத்துவம் மற்றும் நியாயம் மற்றும் பரீட்சைகளை நிரலிடுவது
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) மட்டக்களப்பில் உள்ள தொல்பொருள் தளங்களுக்கான வழிகாட்டுதல் பலகையை அகற்றுதல் தொடர்பான கூற்றொன்றினை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கௌரவ ஆனந்த விஜேபால அவர்கள் முன்வைத்தார்.
(ii) இந்திய - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான சிக்கல்கள் தொடர்பாக 2025.11.08 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ வசந்த சமரசிங்க அவர்கள் பதிலளித்தார்.
(iii) போர் வீரர்களின் பெற்றோருக்கு வழங்கப்படும் கொடுப்பனவு நிறுத்தப்பட்டது தொடர்பான ஊடக அறிக்கை தொடர்பான கூற்றொன்றினை பாதுகாப்பு அமைச்சர் சார்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர அவர்கள் முன்வைத்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2026) - குழு (ஒதுக்கப்பட்ட பதினான்காம் நாள்)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 மற்றும் 3 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i) வான்செலவுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் மக்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகள் போன்றன” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1908 மணியளவில் பாராளுமன்றமானது 2025 நவம்பர் 25ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0900 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks