E   |   සි   |  

காண்க

2025, ஜூலை 24 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 ஆகஸ்ட் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2025 ஆகஸ்ட் 05 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 4.00 பொலிஸ்மா அதிபர் டீ.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோன் அவர்களை 2002ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 17ஆம் வாசகத்தின் பிரகாரம் அப்பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானம் – நிறைவேற்றப்படவுள்ளது
(இது தொடர்பான பிரேரணை 2025.07.25 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2(7) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது)
பி.ப. 4.00 தீர்மானம் மீதான வாக்கெடுப்பு
பி.ப. 4.15 - பி.ப. 5.30 (i) மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு மற்றும் எதிரீட்டுத்தீர்வைகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது

(2025.07.24 ஆம் திகதிய 70 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்திரத்தில் 5 ஆம் இலக்க விடயம்)
(ii) நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது

(2025.07.24 ஆம் திகதிய 70 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்திரத்தில் 7 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.30 - பி.ப. 6.00 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 
2025 ஆகஸ்ட் 06 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 10.30 பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்)
மு.ப. 10.30 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்)
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(2025.07.24 ஆம் திகதிய 70 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்திரத்தில் 11 ஆம் இலக்க விடயம்)
(ii) புகையிலை வரிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(2025.07.24 ஆம் திகதிய 70 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்திரத்தில் 3 ஆம் இலக்க விடயம்)
(iii) புகையிலை வரிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(2025.07.24 ஆம் திகதிய 70 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்திரத்தில் 4 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00- பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 
2025 ஆகஸ்ட் 07 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 – நண்பகல் 12.00 நாணய மாற்றுண்டியல்கள் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (விவாதமின்றி நிறைவேற்றப்படவுள்ளது)
(2025.07.24 ஆம் திகதிய 70 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்திரத்தில் 6 ஆம் இலக்க விடயம்)
நண்பகல் 12.00 - பி.ப. 5.30 நாட்டின் தற்போதைய பொருளாதாரம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்)
 
2025 ஆகஸ்ட் 08 வெள்ளிக்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை (பொது விடுமுறை – போயா தினம்)
 
2025, ஜூலை 08 மற்றும் 22ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 ஜூலை மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.:-

2025 ஜூலை 22 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 (i) வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (இச்சட்டமூலம் விசேட பெரும்பன்மையுடன் நிறைவேற்றப்படவுள்ளது)
(2025.07.08 ஆம் திகதிய 65 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயம்)
(ii) வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (இச்சட்டமூலம் விசேட பெரும்பன்மையுடன் நிறைவேற்றப்படவுள்ளது)
(2025.07.08 ஆம் திகதிய 65 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 3 ஆம் இலக்க விடயம்)
(iii) வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(2025.07.08 ஆம் திகதிய 65 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 4 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 - பி.ப. 6.00 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 
2025 ஜூலை 23 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(2025.07.08 ஆம் திகதிய 65 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 5 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 
2025 ஜூலை 24 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.30 முன்மொழியப்பட்டுள்ள கல்வி சீர்திருத்தம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்)
 
2025 ஜூலை 25 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 அனுதாபப் பிரேரணைகள் -
(i) மறைந்த கௌரவ ராஜவரோதயம் சம்பந்தன், முன்னாள் பா.உ.
(ii) மறைந்த கௌரவ லக்கி ஜயவர்தன, முன்னாள் பா.உ.
(iii) மறைந்த கௌரவ டபிள்யூ. பீ. ஏக்கநாயக்க, முன்னாள் பா.உ.
(iv) மறைந்த கௌரவ ஏ. பிலபிட்டிய, முன்னாள் பா.உ.
(v) மறைந்த கௌரவ (திருமதி) மாலனீ பொன்சேக்கா, முன்னாள் பா.உ.
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 
2025, ஜூன் 20 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 ஜூலை மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2025 ஜூலை 08 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(இந்த ஒழுங்குவிதிகள் 2025.06.17 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு இது தொடர்பான பிரேரணை 2025.06.20 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2(5) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 
2025 ஜூலை 09 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 10.30 பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்)
மு.ப. 10.30 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்)
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.30 2019.04.21 இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி)
 
2025 ஜூலை 10 வியாழக்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை (பொது விடுமுறை)
 
2025 ஜூலை 11 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00

பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன—
(i) தேசிய விளையாட்டு அணியொன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது தேசிய மட்ட சாதனையைப் படைத்துள்ள விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு விளையாட்டுத்துறைக்குரிய ஏதேனும் பட்டப் பாடநெறியைப் பயில்வதற்கு வாய்ப்பினை வழங்குதல்
(கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி)
(ii) கிராமிய கூட்டுறவு வங்கிக் கட்டமைப்பை உரிய முறையில் மேற்பார்வை செய்வதற்கான வேலைத் திட்டமொன்றைத் தயாரித்தல்
(கௌரவ ரோஹண பண்டார)
(iii) தேசிய உற்பத்தியில் கால்நடை வளங்கள் துறையின் பங்களிப்பை அதிகரித்தல்
(கௌரவ சமிந்த விஜேசிறி)
(iv) ஒவ்வொரு இளைஞரையும் போதுமான வருமானத்தை ஈட்டும் தொழிலைக் கொண்டிருக்கும் ஆளாக அல்லது சுய தொழில்புரியும் தொழில்முனைவோராக மாற்றுதல் (கௌரவ ரவி கருணாநாயக்க)
(v) அடிமட்டத்தில் செயற்படும் நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி அதிகாரசபைகள் தொடர்பிலும் மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை தணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல் (கௌரவ லால் பிரேமநாத)
(vi) பிட்டிகல, உடுகம, நெலுவை மற்றும் தெனியாய ஆகிய நகரங்கள் அமைந்துள்ள சூழல் கட்டமைப்பை சுற்றுலா வலயமாக பிரகடனப்படுத்தல் (கௌரவ ரீ.கே. ஜயசுந்தர)

பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 
2025, ஜூன் 20 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், விசேட அமர்வு நாளான 2025 ஜூன் 30 ஆம் திகதி, திங்கட்கிழமைக்கான பாராளுமன்ற சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2025 ஜூன் 30 திங்கட்கிழமை

மு.ப. 09.30 நிதி செயல்நுணுக்கக் கூற்று தொடர்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் அறிவிப்பு
மு.ப. 10.00 - பி.ப. 4.30 நிதி செயல்நுணுக்கக் கூற்று தொடர்பான ஒத்திவைப்பு விவாதம்
 
பிற்குறிப்பு: 2024ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் 11வது பிரிவுக்கு அமைய பாராளுமன்றத்தில் “நிதி செயல்நுணுக்கக் கூற்று” அறிவிக்கப்படவுள்ளதால், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16 இற்கு அமைய கௌரவ பிரதம அமைச்சரினால் விடுக்கப்படும் கோரிக்கைக்கு அமைய சபாநாயகரினால் பாராளுமன்றம் 2025 ஜூன் 30 ஆம் திகதி திங்கட்கிழமை கூட்டப்படுவதற்கு குழு இணங்கியது.

பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks