பார்க்க

E   |   සි   |  

ஒக்டோபர் இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள்

2025, ஒக்டோபர் 10 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 ஒக்டோபர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.:-

2025 ஒக்டோபர் 21 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 (i) தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்
(இவ்வொழுங்குவிதிகள் 2025.10.07 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2025.10.10 அன்று வெளியிடப்படவுள்ள 2(12) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்)
(ii) தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் - குழு ஆய்நிலை
(2025.10.10ஆம் திகதிய 90 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 75 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 
2025 ஒக்டோபர் 22 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 4.30 (i) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை — அங்கீகரிக்கப்படவுள்ளது
(மேற்சொன்ன கட்டளை 2025.08.25 ஆம் திகதிய 2451/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன், 2025.10.21 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்)
(ii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான விதிகள் (அத்தியாயம் 52) – அங்கீகரிக்கப்படவுள்ளது
(இவ்விதிகள் 2025.10.21 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளன)
பி.ப. 4.30 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 
2025 ஒக்டோபர் 23 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.30 போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒழிப்பதற்கான தேசிய திட்டம் மற்றும் சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துதல் (அரசாங்கம்)
 
2025 ஒக்டோபர் 24 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
11.30 a.m. to 5.00 p.m. அனுதாபப் பிரேரணைகள் –
(i) மறைந்த கௌரவ லொஹான் ரத்வத்தே, முன்னாள் பா.உ.
(ii) மறைந்த கௌரவ ஹீன்மஹத்மயா லியனகே, முன்னாள் பா.உ.
(iii) மறைந்த கௌரவ டிக்ஸன் ஜே. பெரேரா, முன்னாள் பா.உ.
(iv) மறைந்த கௌரவ (கலாநிதி) மேர்வின் டீ. த சில்வா, முன்னாள் பா.உ.
(v) மறைந்த கௌரவ வை.ஜீ. பத்மசிரி, முன்னாள் பா.உ.
(vi) மறைந்த கௌரவ ஆர்.எம்.ஆர் சூல பண்டார, முன்னாள் பா.உ.
(vii) மறைந்த கௌரவ மாணிக்கவாசகர் கனகசபாபதி ஈழவேந்தன், முன்னாள் பா.உ.
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks