07

E   |   සි   |  

2021-10-05

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு பாராளுமன்ற விசேட குழுவில் இணக்கம்

தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு தற்போதுள்ள அமைச்சுகளின் கீழ் உள்வாங்கப்படாத அரச நிறுவனங்களால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான பாராளுமன்ற விசேட குழு அனுமதி வழங்கியது.

தற்போதுள்ள அமைச்சுகளின் கீழ் உள்வாங்கப்படாத அரச நிறுவனங்களால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான பாராளுமன்ற விசேட குழு நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ  ஜோன்ஸ்டன் பர்னாந்து தலைமையில் இன்று (05) பாராளுமன்றத்தில் கூடிய போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இந்தப் பாராளுமன்ற விசேட குழுவின் தலைவராக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் காணப்படுகின்றார்.

விசேடமாக 1980 ஆம் ஆண்டு 44 இலக்க தேருநர்களைப் பதிவுசெய்தல் சட்டத்துக்கு அமைய, ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் முதலாம் திகதி 18 வயதை பூர்த்தி செய்த நபர்களே தேருநர்களாக பதிவு செய்யப்படுகின்றனர். எனினும், அந்த தினத்துக்குப் பின்னர் பிறந்த தினத்தை கொண்ட இளையோருக்கு அடுத்த வருடத்தின் மே மாதம் 31 ஆம் திகதிக்குப் பின்னர் இடம்பெறும் தேர்தலிலேயே வாக்குரிமை கிடைக்கின்றது. இதனால் 18 வயது பூர்த்தியடைந்த நபர்களுக்கு விரைவில் வாக்குரிமையைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றது.  

இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் 2021 மார்ச் 13 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது. அதற்கமைய, நாளை (06) இந்த திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்த்தில் முன்வைக்கப்படவுள்ளது.

இந்த விசேட குழுக் கூட்டத்தில் அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், எம்.யு.எம். அலி சப்ரி, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 2

3

 



தொடர்புடைய செய்திகள்

2024-09-09

சிறுவர்களின் போசாக்கின்மை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால,...


2024-09-06

2024 சிறு போகத்தில் சுற்றுச்சூழலுக்கு நட்பான உரப் பாவனை மூலம் பெற்றுக்கொண்ட விளைச்சல் கணக்கெடுப்பு வேலைத்திட்டத்தை உணவுப் பாதுகாப்பு மற்றும்...

சுற்றுச்சூழலுக்கு நட்பான உரப் பாவனை மூலம் பெற்றுக்கொண்ட நெல் விளைச்சல் கணக்கெடுப்பு வேலைத்திட்டத்தை பார்வையிடுவதற்கு கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி உணவுப்...


2024-08-22

பாலின அடிப்படையிலான சம்பள வேறுபாடு குறித்த அறிக்கை சபாநாயருக்குக் கையளிப்பு

பாலின அடிப்படையிலான சம்பள வேறுபாடு குறித்த ஆய்வு அறிக்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி...


2024-08-16

காலதாமதமடைந்துள்ள சியம்பலாண்டுவ சூரிய சக்தி பூங்காவின் கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்த வலுசக்தி மற்றும் போக்குவரத்துப் பற்றிய துறைசார் மேற்பார்வைக்...

கட்டுமானம் தாமதமாவதால் நாளொன்றுக்கு 19 மில்லியன் ரூபா இழப்பு - இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை குழுவிடம் தெரிவிப்பு நிறைவேற்றுத்தர...






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks