07

E   |   සි   |  

2023-12-07

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுடன் இணைந்த நிறுவனங்கள் சில பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில்

இலங்கையிலிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்த கருத்துக்களைக் பெற்றுக்கொள்வதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுடன் இணைந்த நிறுவனங்கள் சில பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டன.

இதற்கமைய ஏற்றுமதி ஊக்குவிப்புச் சபை, முதலீட்டுச் சபை, கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி நிறுவனங்கள் இரண்டு, Techno Park திட்டத்தின் அதிகாரிகள் மற்றும் இலங்கை சீனி தனியார் நிறுவனம் போன்றன இக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தன.

சில பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ புத்திக பத்திரண தலைமையில் அண்மையில் (நவ. 30) கூடியபோதே இந்நிறுவனங்கள் அழைக்கப்பட்டிருந்தன.

இங்கு உரையாற்றிய குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ புத்திக பத்திரன, ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வகிபாகம் மற்றும் அடுத்த இரண்டு வருடங்களுக்கான அதன் திட்டங்கள் குறித்துக் கேட்டறிந்தார். ஏற்றுமதியை மேம்படுத்துவதே இந்தச் சபையின் முக்கிய பணி என ஏற்றுமதி அபிவிருத்திச் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அடுத்த சில வருடங்களுக்கு தயாரிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பிலான விளக்கம் குழுவுக்கு வழங்கப்பட்டது.

அத்துடன், இந்நாட்டில் அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் ஆடை தொழில்துறையுடன் தொடர்புபட்ட உற்பத்திகள் முக்கியத்துவம் பெறுவதாகக் குறிப்பிட்ட அதிகாரிகள், நாட்டில் தற்பொழுது உற்பத்திக்காக அதிக செலவு ஏற்படுவதால் வெளிநாட்டு சந்தையில் காணப்படும் போட்டித் தன்மைக்கு முகங்கொடுக்க உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களால் முடியாமல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினர். இதற்கு அமைய, மின்சாரம், நீர் மற்றும் போக்குவரத்துக்காக ஒதுக்கப்படும் செலவீனம் குறைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.

அத்துடன் கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான இரண்டு நிறுவனங்களுடனும் டெக்னோ பார்க் திட்டத்தின் அதிகாரிகளுடனும் இலங்கை தேசிய சீனி தனியார் நிறுவத்தின் அதிகாரிகளுடனும் தற்போதுள்ள பிரச்சினைகள் மற்றும் எதிர்கால முன்மொழிவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சுஜித் சஞ்சய் பெரேரா, கௌரவ பி.வை.ஜி ரத்னசேகர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

1 2



தொடர்புடைய செய்திகள்

2024-09-09

சிறுவர்களின் போசாக்கின்மை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால,...


2024-09-06

2024 சிறு போகத்தில் சுற்றுச்சூழலுக்கு நட்பான உரப் பாவனை மூலம் பெற்றுக்கொண்ட விளைச்சல் கணக்கெடுப்பு வேலைத்திட்டத்தை உணவுப் பாதுகாப்பு மற்றும்...

சுற்றுச்சூழலுக்கு நட்பான உரப் பாவனை மூலம் பெற்றுக்கொண்ட நெல் விளைச்சல் கணக்கெடுப்பு வேலைத்திட்டத்தை பார்வையிடுவதற்கு கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி உணவுப்...


2024-08-22

பாலின அடிப்படையிலான சம்பள வேறுபாடு குறித்த அறிக்கை சபாநாயருக்குக் கையளிப்பு

பாலின அடிப்படையிலான சம்பள வேறுபாடு குறித்த ஆய்வு அறிக்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி...


2024-08-16

காலதாமதமடைந்துள்ள சியம்பலாண்டுவ சூரிய சக்தி பூங்காவின் கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்த வலுசக்தி மற்றும் போக்குவரத்துப் பற்றிய துறைசார் மேற்பார்வைக்...

கட்டுமானம் தாமதமாவதால் நாளொன்றுக்கு 19 மில்லியன் ரூபா இழப்பு - இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை குழுவிடம் தெரிவிப்பு நிறைவேற்றுத்தர...






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks