07

E   |   සි   |  

2024-04-08

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவின் தலைவராக கௌரவ தாரக பாலசூரிய ஏகமனதாகத் தெரிவு

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடருக்கான பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவின் தலைவராக இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக பாலசூரிய ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார்.  ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடருக்கான இந்தக் குழுவின் முதலாவது கூட்டம் கடந்த ஏப்ரல் 01ஆம் திகதி இடம்பெற்ற போதே அவர் தெரிவுசெய்யப்பட்டார்.

இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக பாலசூரியவின் பெயரை இராஜாங்க அமைச்சர் கௌரவ கனக ஹெரத் பிரேரித்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சீ.பீ. ரத்னாயக அதனை வழிமொழிந்தார்.

நான்காவது கூட்டத்தொடரின் போதும் பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவின் தலைவராக இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக பாலசூரிய பதவி வகித்திருந்தார். இந்தக் குழுவின் நோக்கு எல்லை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் நோக்கு எல்லைக்கு சமமானதாக இருப்பதாகச் சுட்டிக்காட்டிய குழுவின் தலைவர், இதனை மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். பொருளாதாரம் தொடர்பான சகல தரப்பினரையும் உள்ளடக்கும் வகையில் இந்தக் குழுவின் நோக்கு எல்லை விஸ்தரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்தார்.

எவ்வாறாயினும், குழுவின் நோக்கெல்லையை மாற்றுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படாததால், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் குழுவின் அங்கத்தவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் கலந்துரையாட முடியும் என குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதற்கமைய எதிர்வரும் தினத்தில் இது தொடர்பில் விசேட அமர்வொன்றை  நடத்தவும் குழு தீர்மானித்தது.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் பாராளுமன்ற உறுப்பினர்களான, கௌரவ மனோ கணேசன், கௌரவ சீ.பீ. ரத்னாயக, கௌரவ எஸ்.எம். சந்திரசேன, கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, கௌரவ சிவஞானம் சிறிதரன், கௌரவ (கலாநிதி) நாளக கொடஹேவா மற்றும் கௌரவ அகில எல்லாவல உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

1 2



தொடர்புடைய செய்திகள்

2024-09-09

சிறுவர்களின் போசாக்கின்மை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால,...


2024-09-06

2024 சிறு போகத்தில் சுற்றுச்சூழலுக்கு நட்பான உரப் பாவனை மூலம் பெற்றுக்கொண்ட விளைச்சல் கணக்கெடுப்பு வேலைத்திட்டத்தை உணவுப் பாதுகாப்பு மற்றும்...

சுற்றுச்சூழலுக்கு நட்பான உரப் பாவனை மூலம் பெற்றுக்கொண்ட நெல் விளைச்சல் கணக்கெடுப்பு வேலைத்திட்டத்தை பார்வையிடுவதற்கு கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி உணவுப்...


2024-08-22

பாலின அடிப்படையிலான சம்பள வேறுபாடு குறித்த அறிக்கை சபாநாயருக்குக் கையளிப்பு

பாலின அடிப்படையிலான சம்பள வேறுபாடு குறித்த ஆய்வு அறிக்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி...


2024-08-16

காலதாமதமடைந்துள்ள சியம்பலாண்டுவ சூரிய சக்தி பூங்காவின் கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்த வலுசக்தி மற்றும் போக்குவரத்துப் பற்றிய துறைசார் மேற்பார்வைக்...

கட்டுமானம் தாமதமாவதால் நாளொன்றுக்கு 19 மில்லியன் ரூபா இழப்பு - இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை குழுவிடம் தெரிவிப்பு நிறைவேற்றுத்தர...






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks