07

E   |   සි   |  

2024-09-04

செய்தி வகைகள் : செய்திகள் 

பகிரங்க சேவை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரை நியமிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரல்

பகிரங்க சேவை ஆணைக்குழுவில்  உறுப்பினர் ஒருவரின் பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்கு விருப்புடைய தனிநபர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 54 ஆம் உறுப்புரையில் குறித்துரைக்கப்பட்டுள்ளவாறாக, பாராளுமன்ற உறுப்பினராக, மகாண சபை உறுப்பினராக, உள்ளூரதிகாரசபை உறுப்பினராக இருக்கும் எவரும் பகிரங்க சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்குத் தகைமையுடையோராக இருக்கமாட்டார்கள்.

மேலும் ஆணைக்குழுவின் ஓர் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு முன்பதாக, அரச சேவையில் அரச உத்தியோகத்தராக அல்லது நீதித்துறை உத்தியோகத்தராக இருந்த எவரும் அவரின் நியமனத்திற்கு முன்பதாக, அவ்வாறான நியமனம் செயலூக்கம் பெறுகையில், அவ்வாறான பதவிகளில் இருந்து நீங்க வேண்டும் என்பதுடன் அரச உத்தியோகத்தராக அல்லது நீதித்துறை உத்தியோகத்தராக மேலும் நியமிக்கப்படுவதற்கு தகுதியற்றவராவர்.

பாராளுமன்ற இணையத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் தயாரிக்கப்பட்டு, முறையாகப் பூர்த்தியாக்கப்பட்ட விண்ணப்பங்கள், 2024 செப்டெம்பர் 23 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலில், "அரசியலமைப்புப்  பேரவையின் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப்  பேரவை - அலுவலகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டே" எனும் முகவரிக்கு அல்லது constitutionalcouncil@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாக ‘பகிரங்க சேவை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம்’ எனக் குறிப்பிடப்படல் வேண்டும்.  



தொடர்புடைய செய்திகள்

2024-09-13

வெளிநாட்டுத் தீர்ப்புக்களைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமூலம் மற்றும் குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை...

கடந்த 03 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டுத் தீர்ப்புக்களைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல்,...


2024-09-11

வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலத்தில் அரசியலமைப்பின் 79 உறுப்புரைக்கு அமைய சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று...


2024-09-04

இலங்கை மத்திய வங்கியின் பணிகள் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் பாராளுமன்றத்தைத் தெளிவுபடுத்தினார்

இலங்கை மத்திய வங்கியின் பணிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கூட்டம் சபாநாயகர் கௌரவ மஹிந்த...


2024-09-03

கௌரவ சபாநாயகரின் அறிவிப்பு - 2024.09.03

“நிகழ்நிலைக் காப்பு (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம்...






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks