பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-04-25
செய்தி வகைகள் : செய்திகள்
பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க பொலிஸ் விசாரணைக் குழுவொன்றைப் பரிந்துரைக்குமாறு, விசாரணைக் குழு பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது. குறித்த விசாரணைக்குழு இரண்டாவது தடவையாக இன்றையதினம் (ஏப். 25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.
அத்துடன், இந்தக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் (ஜனாதிபதி சட்டத்தரணி) திலீப பீரிஸ் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரஜித பெரேரா ஆகியோர் சட்டமாஅதிபரினால் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்கால விசாரணைச் செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுப்பது மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரை எவ்வாறு இணைத்துக் கொள்வது என்பது தொடர்பில் இன்றையதினம் கூடிய விசாரணைக்குழு கலந்துரையாடியது.
எதிர்கால நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிப்பதற்கு 2025.04.28ஆம் திகதி மீண்டும் கூடுவதற்கும் இக்குழு முடிவு செய்தது.
2025-05-02
குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன 2025.04.30ஆம் திகதி தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப் படுத்தினார். குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் 2025.04.08ஆம் திகதி இடம்பெற்றதுடன், இரண்டாவது மதிப்பீட்டைத் தொடர்ந்து குழு நிலையில் ஆராயப்பட்டது. இதன் பின்னர் மூன்றாவது மதிப்பீட்டின்போது குறித்த சட்டமூலம் வாக்கெடுப்பின்றி திருத்தங்கள் இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக 2025.03.01ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமாக அமுலுக்கு வருகின்றது.
2025-04-29
பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க பொலிஸ் விசாரணைக் குழுவொன்றைப் பரிந்துரைக்குமாறு, விசாரணைக் குழு விடுத்த கோரிக்கைக்கு அமைய பதில் பொலிஸ்மா அதிபர் குறித்த விசாரணைக் குழுவை நியமித்துள்ளார். இந்த விசாரணைக் குழு நேற்றையதினம் (28) பாராளுமன்றத்தில் மூன்றாவது தடவையாகவும் கூடியபோது நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் விசாரணைக் குழுவின் ஒத்துழைப்புடன் எதிர்கால விசாரணைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், 2025.04.30ஆம் திகதி மீண்டும் கூடுவதற்கு இந்த விசாரணைக் குழு தீர்மானித்தது.
2025-04-24
2025-04-23
பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களைப் பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்கான விசாரணைக் குழு இன்றையதினம் (ஏப். 23) பாராளுமன்றத்தில் முதல் தடவையாகக் கூடிக் கலந்துரையாடியது. இந்தக் குழுவுக்கு உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி.சூரசேன அவர்கள் தலைமை தாங்குவதுடன், நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஈ.டபிள்யூ. எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர். இக்குழு மீண்டும் 25ஆம் திகதி கூடவுள்ளது. 2002ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 05ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 3 (ஈ) மற்றும் 3(உ) பிரிவுகளிற்கு அமைய துர்நடத்தை மற்றும் பதவியின் தத்துவங்களைப் பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு குறித்த சட்டத்தின் 5வது பிரிவுக்கு அமைய விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் கடந்த 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks