E   |   සි   |  

2025-05-22

செய்தி வகைகள் : சபை அலுவல்கள் 

2025 மே 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களில் பணியாற்றும் உறுப்பினர்களுக்கான செயலமர்வு


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ தர்மப்ரிய விஜேசிங்ஹ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த லலித் குமார                    
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) நிலூஷா லக்மாலி கமகே
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அருண பனாகொட                    
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்து
(v)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிரி பஸ்நாயக்க                    
(vi)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே
(vii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தினிந்து சமன் ஹென்னாயக்க                    
(viii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர                    
(ix)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ ரவி கருணாநாயக்க

மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 11 வரையான) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i)    இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii)    ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான பத்து தீர்மானங்கள்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“வட மாகாணத்தில் சிறிய மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களை மேம்படுத்துதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2025 மே 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.



தொடர்புடைய செய்திகள்

2025-06-04

2025 ஜூன் 04ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள் 1 : “இலங்கை மின்சாரம் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல் இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -•    2022 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாம் தொகுதியின் LXV ஆம் பகுதியையும்;  மற்றும் •    2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாம் தொகுதியின் XLV ஆம் பகுதியையும் மூன்றாவது தொகுதியின் XVIII ஆம் பகுதியையும்; மற்றும் •    2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் I ஆம் பகுதிபத்திரங்கள் சமர்ப்பித்தல் (i)    2023 ஆம் ஆண்டுக்கான தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் ஆண்டறிக்கை.(ii)    2024 ஆம் ஆண்டுக்கான கடற்றொழில் வெகுமதி நிதியத்தின் செயலாற்றுகை அறிக்கை.(iii)    2024 ஆம் ஆண்டுக்கான கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.(iv)    2024 ஆம் ஆண்டுக்கான கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.(v)    2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் கடன்கள் மற்றும் அபிவிருத்தி நிதியத்தின் வருடாந்த அறிக்கை.(vi)    2021 ஆம் ஆண்டுக்கான தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் ஆண்டறிக்கை.குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல் (i)    நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(ii)    உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(iii)    பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் இரண்டாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஷாந்த சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல் (i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா    -  மூன்று மனுக்கள் (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்                   (iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் உபுல் கித்சிறி                    (v)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லசித் பாஷண கமகே                    (vi)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக - மூன்று மனுக்கள் (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள் பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு கேள்விகள் கேட்கப்பட்டன:-(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்க ரங்கனாத்(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ திசாநாயக்கபாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள் (i)    கௌரவ கே. காதர் மஸ்தான் வடக்கிற்கான இடைநிறுத்தப்பட்ட ரயில் சேவைகளை மீள்ஆரம்பித்தல்(ii) கௌரவ திலித் ஜயவீர சுற்றுலாத் துறையிலுள்ள சிக்கல்கள்இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-(i)    குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்(ii)    ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள் பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலங்க யூ. கமகே(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கரஅதனையடுத்து, 1641 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஜூன் 05ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


2025-06-03

2025 ஜூன் 03ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சனாதிபதியின் செய்திகள் 1 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)சபாநாயகரின் அறிவித்தல்கள் 2 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்3 : “இலங்கை மின்சாரம் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதியொன்று கிடைக்கப் பெறல்4 : பத்தாவது பாரளுமன்றத்தின் இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பூர்வாங்கக் கூட்டம்5 : பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிப் பட்டறைசபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல் இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -•    2022 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாம் தொகுதியின் LXIV ஆம் பகுதியையும்;  மற்றும் •    2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாம் தொகுதியின் XLIII மற்றும் XLIV ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXV மற்றும் XXVI ஆம் பகுதிகள்பத்திரங்கள் சமர்ப்பித்தல் (i)    2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2025 மார்ச் 27 ஆம் திகதிய 2429/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.(ii)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 20 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 ஏப்ரல் 29 ஆம் திகதிய 2434/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள். (iii)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 20 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 மே 05 ஆம் திகதிய 2435/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள். (iv)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 24(அ) (1) ஆம் பிரிவின்  கீழ்  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடனான கலந்தாலோசனையின்பேரில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் ஒவ்வாமையியல் மற்றும் நோயெதிர்ப்புச் சக்தியியல் நிறுவகத்தினை நிறுவுதல் மற்றும் அத்தகைய நிறுவகத்துக்கு அப் பெயரையும் பெயர் மகுடத்தினையும் குறித்தளித்தல் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2025 பெப்ரவரி 20 ஆம் திகதிய 2424/58 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.(v)    2025 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2025.03.28 முதல் 2025.04.30 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்தி நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு.(vi)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை.(vii)    2022/2023 ஆம் ஆண்டுக்கான பிசீசீ லங்கா லிமிடெட்டின் ஆண்டறிக்கை.(viii)    2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் 3 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படுவதாகிய 34 ஆம் பிரிவின் கீழ் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரால் ஆக்கப்பட்டு 2025 ஏப்ரல் 03 ஆம் திகதிய 2430/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.(ix)    2024 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க, வெளிநாட்டு தீர்ப்புகளைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டத்தின் 2(1) ஆம் பிரிவின் கீழ் மற்றும் 1(2) ஆம் பிரிவின் கீழும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2025 மார்ச் 28 ஆம் திகதிய 2429/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட  கட்டளைகள்.குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல் விஞ்ஞானம்,  தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (டாக்டர்) ஜனக சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல் (i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க - இரண்டு மனுக்கள் (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜந்த கம்மெத்தெகே                    (iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள் (i)    கௌரவ சஜித் பிரேமதாச உள்ளூர் சீனி உற்பத்தி மற்றும் இறக்குமதி மேற்சொன்ன வினாவுக்கு கௌரவ கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் பதிலளித்தார்.(ii) கௌரவ சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சியிலுள்ள சிலோன் ஜேர்மன் தொழில்நுட்ப நிறுவகத்தில் காணப்படும் வளப் பற்றாக்குறை மற்றும் இதர பிரச்சினைகள் மேற்சொன்ன வினாவுக்கு கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் பதிலளித்தார்.அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள் (i)    அரசாங்கங்களுக்கிடையிலான ஒப்பந்தத்தின் கீழ் மருந்து கொள்வனவு செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக 2025.05.09 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் பதிலளித்தார்.(ii)    உப்பு உற்பத்தி மற்றும் ஆனையிறவு உப்பளம் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக 2025.05.23 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்கள் பதிலளித்தார்.(iii)    சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் மற்றும் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துதல் தொடர்பான சிக்கல்கள் தொடர்பாக 2025.05.23 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சார்பாக நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும அவர்கள் பதிலளித்தார்.சிறப்புரிமைக் கேள்விகள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா  தன்னைப் பற்றி கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்கள் தெரிவித்துள்ள தவறான குற்றச்சாட்டுசட்டமூலங்கள் சமர்ப்பணம் கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-(i)    வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தம்) - 2016 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தைத் திருத்துவதற்கானது(ii)    வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தம்) - 2016 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படிச் சட்டத்தைத் திருத்துவதற்கானது(iii)    வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தம்) - 2005 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படிச் சட்டத்தைத் திருத்துவதற்கானதுஇன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயம்) விவாதிக்கப்பட்டதுடன் எதிர்வரும் தினமொன்றுக்கு ஒத்திவைக்கப்பட்டது.ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை “வெள்ள நிலைமைக்கு தீர்வு காண்பதற்கான அமைப்பொன்றை நிறுவுதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அசித நிரோஷண எகொட வித்தான அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஜூன் 04ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


2025-05-23

2025 மே 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள் 1 : பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர அவர்களின் நடத்தை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக விசேட குழுவின் நியமனம்2 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்3 : அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களில் பணியாற்றும் உறுப்பினர்களுக்கான செயலமர்வுபத்திரங்கள் சமர்ப்பித்தல் 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் அறிக்கைகளும் தொழிற்பாடுகளும்குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல் அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல் (i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நாமல் சுதர்சன -  இரண்டு மனுக்கள் (iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க                    (iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வருண லியனகே                    (v)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான்                    (vi)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன தென்னகோன் - இரண்டு மனுக்கள் (vii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க -  மூன்று மனுக்கள் (viii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஷாந்த சமரவீர (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள் (i)    கௌரவ சஜித் பிரேமதாச சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் மற்றும் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துதல் தொடர்பான சிக்கல்கள்(ii) கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா உப்பு உற்பத்தி மற்றும் ஆனையிறவு உப்பளம் தொடர்பான பிரச்சினைகள்சட்டமூலங்கள் சமர்ப்பணம் 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, இலங்கை மின்சாரச் சட்டத்தைத் திருத்துவதற்காக “இலங்கை மின்சாரம் (திருத்தம்)” எனும் சட்டமூலத்தினை கௌரவ வலுசக்தி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க) பின்வரும் சட்டமூலங்கள் சபையில் பிரேரிக்கப்பட்டதுடன் 2 ஆம் இலக்க விடயம் மாத்திரம் சபையால் நிறைவேற்றப்பட்டது.:- (i)    குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்)(ii)    வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்)ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள் பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-(i)    கௌரவ உபுல் கித்சிறி(ii)    கௌரவ சனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர்அதனையடுத்து, 1644 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஜூன் 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


2025-05-21

2025 மே 21ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள் 1 : பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினவப்படும் வினாக்கள் தொடர்பானதுசபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல் (i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் கணக்காய்வு அறிக்கையின் பத்தாவது தொகுதியினது — •    கறவை மாடு இறக்குமதி செயற்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் II ஆம் பகுதியின் கீழ் 15,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்கான முற்பணம் வழங்குதல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை; மற்றும்•    2024 சனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் “இளைஞர்களை இன்னல்களிலிருந்து மீட்டெடுத்தல்” என்ற கருப்பொருளின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் மேற்கொள்ளப்பட்ட 6 நிகழ்ச்சித்திட்டங்களின் முறைப்படியான தன்மை, பயனுறுதி மற்றும் மன்றத்தின் முக்கிய நோக்கங்களுடன் இணங்குதல் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கை (ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் கணக்காய்வு அறிக்கையின் எட்டாவது தொகுதியின் ‘அப்பி வெனுவென் அப்பி’ நிதியத்தின் செயலாற்றல் மதிப்பீடு தொடர்பான அறிக்கைபத்திரங்கள் சமர்ப்பித்தல் (i)    2022 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மனிதவள மேம்பாட்டு நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் வருடாந்த நிதிக் கூற்றுக்கள்.(ii)    2016, 2017, 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான லக்திவ என்ஜினியரிங் (பிரைவேட்) லிமிட்டட்டின் ஆண்டறிக்கைகள்.(iii)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஆயுள்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை.(iv)    2023/2024 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை பொஸ்பேட் நிறுவனத்தின் ஆண்டறிக்கை.(v)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய ஆராய்ச்சி சபையின் வருடாந்த அறிக்கை.மனுக்களைச் சமர்ப்பித்தல் (i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலங்க யூ. கமகே  - மூன்று மனுக்கள் (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ (iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ திசாநாயக்க                    (iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நந்தன பத்மகுமார -  நான்கு மனுக்கள் (v)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுதத் பலகல்ல                    (vi)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மனோஜ் ராஜபக்ஷ் - இரண்டு மனுக்கள் (vii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி ஹசாரா லியனகே (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள் கௌரவ ரவி கருணாநாயக்க சமீபத்திய மின்சாரத் தடை மற்றும் சூரிய சக்தி சிக்கல்கள்இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-(i)    நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை(ii)    நிதிச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள் பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-(i)    கௌரவ (செல்வி) சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர(ii)    கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கரஅதனையடுத்து, 1703 மணியளவில் பாராளுமன்றமானது 2025 மே 22ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks