பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
அதிக நெகிழ்திறன் மிக்க சமூகங்களைக் கட்டியெழுப்புவதற்காக அறிவு, திறன்கள் மற்றும் வலையமைப்புக்கள் போன்றவற்றில் தொடங்கி பல்வேறு பங்களிப்புக்களின் ஊடாக நாடுகளின் நிலப்பரப்புகளை வடிவமைப்பதிலும் மற்றும் மாற்றியமைப்பதிலும் புலம்பெயர்ந்தோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது.
இந்த ஆண்டு, டிசம்பர் 18, 2021 அன்று, ‘மனித நடமாட்டத்தின் திறனைப் பயன்படுத்துதல்’ என்ற கருப்பொருளின் கீழ் சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தைக் கொண்டாடுகின்றோம். இரண்டாம் உலகப் போரினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவுவதற்கான உண்மையான நோக்கத்துடன் நிறுவப்பட்ட இடம்பெயர்வுகளுக்கான சர்வதேச அமைப்பின் (1989 ஆம் ஆண்டில் மறுபெயரிடப்பட்டது) 70 வது ஆண்டு நிறைவை இந்த ஆண்டு குறிக்கின்றது. ஆனால் இலக்கு நாடுகளில் மாத்திரம் மனிதாபிமான மற்றும் முறையான குடியேற்ற நிர்வாகத்தை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், ஆரம்ப மற்றும் இடம்பெயர் நாடுகளிலும் ஊக்குவிப்பதில் தொடர்ந்தும் முன்னணியில் உள்ளது. இது கொண்டாட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு மைல்கல் ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும், இயற்கை பேரழிவுகள், பொருளாதார சவால்கள், வறுமை மற்றும் மோதல்களின் அதிகரித்த அளவின்; விளைவாக ஏற்படும் பல்வேறு காரணிகளால், அதிகமான மக்கள் தானாக முன்வந்து, அல்லது சர்வதேச புலம்பெயர்ந்தவர்களாக மாற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர். எடுத்துக்காட்டாக, 2020 ஆம் ஆண்டு மாத்திரம், உலக மக்கள்தொகையில் 3.6 வீதத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிட்டத்தட்ட 281 மில்லியன் மக்கள் சர்வதேச ரீதியில் புலம்பெயர்ந்தார்கள்.
“எனவே, குடியேற்றத்தின் அதிகரித்து வரும் போக்குகளைக் கவனத்திற் கொள்வதும், மற்றும் புலம்பெயர்பவர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் அதேவேளை நாட்டின் பொருளாதாரத்திற்கு குடியேற்றத்தின் அதிகபட்ச பங்களிப்பைப் பயன்படுத்தும் முகமான கொள்கைகள் மற்றும் உத்திகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியமானதாகும்.” என கோவிட் 19 கட்டுப்பாடு, ஆரம்ப சுகாதாரம் மற்றும் தொற்றுநோய்கள் இராஜாங்க அமைச்சர் மற்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவி டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கூறினார்.
குறிப்பாக இலங்கையில் மிகவும் பொதுவான இடம்பெயர்வின் வடிவம் கடந்த மூன்று தசாப்தங்களாக அதிகரித்து வரும் சர்வதேச தொழிலாளர் இடம்பெயர்வு ஆகும். சராசரியாக 1.5 மில்லியன் இலங்கையின் புலம்பெயர்ந்தோர்கள் வெளிநாட்டில் பணிபுரிவதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அதேவேளை ஆண்டிற்கு சராசரியாக 200,000 நபர்கள் வெளியேறுகின்றனர்.
“இந்த நாள் குறிப்பாக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்திற்கு சிறப்பு ஆர்வமாக உள்ளது, ஏனெனில் பொதுவாக இலங்கையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் சுமார் 47.7% பெண்கள் ஆவர் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன” என்று டாக்டர் பெர்னாண்டோபுள்ளே மேலும் கூறினார்.
2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உலகப் பொருளாதாரம் மற்றும் மனித இயக்கம் ஆகியவற்றைப் பாதித்த கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, இடம்பெயர்வு, குறிப்பாக தொழிலாளர் இடம்பெயர்வு தொடர்பான புள்ளிவிவரங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாறியுள்ளன.
“ஆகஸ்ட் மாதம், குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவுடன், குவைத்தில் இருந்து இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழுவை திருப்பி வரவழைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டது” என்று டாக்டர் பெர்னாண்டோபுள்ளே கூறினார்.
மக்கள் நடமாட்டம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் மற்றும் அதிகளவான புலம்பெயர்ந்த தொழிலாளர்;கள் தமது இலக்கு நாடுகளில் இருந்து தாயகம் திரும்புவதால், இலங்கையானது, வெளிநாட்டில் பணிபுரியும் நபர்களால் பெறப்பட்ட திறன்களை நாட்டின் பொருளாதார நலனுக்காக, குறிப்பாக அடையாளம் காணப்பட்ட சில துறைகளில், குறிப்பாக சுற்றுலா மற்றும் ஆயுர்வேத மருத்துவம் போன்ற துறைகளில் பயன்படுத்துவதன் மூலம் பொருளாதார மீட்சிக்காக மீண்டும் ஒருங்கிணைத்து மீண்டும் சமூகமயமாக்குவதற்கான உத்திகளை உருவாக்கி வருகின்றது.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “பாதுகாப்பான மற்றும் வழக்கமான தொழிலாளர் இடம்பெயர்வு திட்டங்களுக்காக 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார். மேலும், புலம்பெயர்வுச் செயற்பாட்டில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலைகளில் ஒன்றில் கவனம் செலுத்துதல், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் செயல்படுத்தும் முகவர் நிறுவனங்களுக்கான சிறந்த முன் புறப்பாட்டுப் பயிற்சிகளை வழங்குதல் ஆகியவற்றுக்கு வரும் ஆண்டில் முன்னுரிமை அளிக்கப்படும்.
2018 ஆம் ஆண்டில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியத்தில் (SLBFE) இலிருந்து பெறப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைக்கான மொத்தப் புறப்பாடுகளில் 55.2% ஆனவை குறைந்த திறமையுடைய மற்றும் வீட்டுப் பணியாளர்கள் பிரிவுகளாகும்.
“இந்த உண்மையை சிறப்பாகக் கருத்திற் கொண்டு, இலங்கையின் பொருளாதாரத்தில் கணிசமான பங்களிப்பைச் செய்யும், குறிப்பாக வெளிநாட்டுப் பணம் அனுப்புதல் மூலம், வீட்டுப் பணியாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை சிறந்த முறையில்; பாதுகாப்பதற்காகவும், அவர்களின் நலன்களைப் பேணுவதற்காகவும், ILO உடன்படிக்கை எண். 189 இனை அங்கீகரிப்பதற்காக, பெண்களின் ஒன்றியமானது அரசாங்கத்துடன் கலந்துரையாடலைத் தொடங்கியுள்ளது.” என டாக்டர் பெர்னாண்டோபுள்ளே கூறினார்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks