E   |   සි   |  

இயலாமை உடையவர்களை உள்ளடக்கிய மற்றும் அணுகக்கூ

  • சர்வதேச இயலாமை உடையவர்கள் தினத்தைக் கொண்டாடும் வகையில் வெளியிடும் ஊடக அறிக்கை

“டிசம்பர் 3 ஆம் தேதி, இயலாமை உடையவர்கள் தினத்தை நாங்கள் கொண்டாடுகின்றோம். இயலாமை உடையவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வதை ஊக்குவிப்பதனையும், மற்றும் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார வாழ்வில் அவர்களை ஒருங்கிணைத்து அதிக அளவில் ஈடுபடுத்துவதன் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதனையும் ஒட்டுமொத்த குறிக்கோளாகக் கொண்டு இந்த நாள் அனுசரிக்கப்படுகின்றது. இவ்வாறு, இந்த நாள் அனுசரிக்கப்படுவதானது இயலாமை உடையவர்களின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் மிக முக்கியமாக, அவர்களின் கண்ணியத்திற்கான ஆதரவைத் திரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது”, என்று கோவிட்-19 கட்டுப்பாடு, ஆரம்ப சுகாதாரம் மற்றும் தொற்றுநோய்களுக்கான மாண்புமிகு இராஜாங்க அமைச்சரும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவருமான டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

இந்த ஆண்டிற்கான தினத்தின் உலகளாவிய கருப்பொருள், குறிப்பாக, “உள்ளடக்கிய, அணுகக்கூடிய மற்றும் நிலைபேறான கோவிட்-19 இற்குப் பிந்தைய உலகை நோக்கிய இயலாமை உடைய நபர்களின் தலைமைத்துவம் மற்றும் பங்கேற்பு” என்பதாகும்.

இந்த ஆண்டு இயலாமை உடையவர்கள்; தினத்திற்கான பொதுவான ஒட்டுமொத்த குறிக்கோள்கள் மற்றும் குறிப்பிட்ட கருப்பொருளுக்கு இணங்க, பாராளுமன்றமானது பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்துடன் இணைந்து பல வேலைத் திட்டங்களை ஆரம்பித்துள்ளதுடன்; அத்தகைய நபர்களின் உரிமைகள், மொழி உரிமைகள் மற்றும் குறிப்பாக பாராளுமன்றத்திற்கான அணுகல் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட அவ்வாறானதொரு நிகழ்ச்சி இவ்வருடம் ஜூன் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்ற ‘இயலாமை உடையோர் உரிமைகள் தொடர்பான கொள்கை உரையாடல்’ என்பதாகும் எனவும் இதன் போது இயலாமை உடையோர்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாகவும் கலாநிதி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். உண்மையில், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் பெண்கள் மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான தெரிவுக் குழு ஆகியன இயலாமை உடையவர்களிடமிருந்து நேரடியாக செவிமடுக்கும் வாய்ப்பைப் பெற்றன, ஏனெனில் பல இயலாமை உடையவர்களின் பிரதிநிதிகளுக்கு அவர்களின் கவலைகள் மற்றும் ஆலோசனைகளைக் கூறுவதற்கான வாய்ப்பும் மேடையும் வழங்கப்பட்டது.

இவ்வாறான உரையாடல்களின் விளைவாக, பாராhளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக, ஒன்றியத்தினால் ஆரம்பிக்கப்பட்ட கோரிக்கையின் பேரில், வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது சைகை மொழி விளக்கம் வழங்கப்பட்டதனால் ஒன்றியமானது பெருமிதம் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது, ஒரே நேரத்தில் சைகை மொழி விளக்க எதிர்வுரை நவம்பர் 12 முதல் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதன் மூலம் இயலாமை உடையவர்களின் மொழி உரிமைகள் மற்றும் குடியுரிமை விடயங்கள் குறித்த தகவல்களை அணுகுதல் ஆகிய இரண்டும் நிலைநிறுத்தப்பட்டது.

மேலும், நவம்பர் 25, 2021 அன்று, தனது அமைச்சின் கீழ் உள்ள சமூக சேவைகள் திணைக்களமானது இயலாமை உடைய நபர்களுக்கு அதிகளவு ஊக்கம், அங்கீகாரம் மற்றும் தெரிவுநிலையை வழங்கும் நோக்கில் படைப்பாற்றலுக்காக அவர்களுக்கான பாராட்டை வழங்கியது.

2016 ஆம் ஆண்டு இலங்கை அங்கீகரித்த இயலாமை உடையவர்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் (UNCRPD) உறுப்புரை 33 இன் கீழ் இலங்கையின் கடப்பாடுகள் தொடர்பில் ஒன்றியமானது கவனத்திற் கொண்டுள்ளதாகவும், UNCRPD செயற்படுத்தப்படுவதை ஊக்குவித்தல், பாதுகாத்தல் மற்றும் கண்காணித்தல் ஆகிய பணிகளுக்குப் பொறுப்பான சுயாதீன அமைப்பொன்றை அமைப்பதற்கான முன்முயற்சியை எடுத்து வருவதாகவும் கலாநிதி பெர்னாண்டோபுள்ளே கருத்துத் தெரிவித்தார். இது சர்வதேச தரங்களுடன் நாடு இணங்குவதை உறுதிப்படுத்தும் கூடுதல் நன்மையினையும் வழங்கும்.

இலங்கையில் இயலாமை உடையோர்; தொடர்பான சமீபத்திய புள்ளிவிபரங்கள் மற்றும் கணிப்புக்களைக் கருத்திற் கொண்டு, வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்குவதற்கு இயலாமை உடையவர்களுக்கான உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் ஆதரவைத் திரட்டுதல் பற்றிய உரையாடல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. “உதாரணமாக, மக்கள்தொகை கணிப்புக்கள், சுகாதார அமைச்சினால் நடாத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், 2040 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்த சனத்தொகையில் 24மூ இயலாமை உடையவர்கள் இருப்பார்கள் என்று குறிப்பிடுகின்றது. பார்வைக் குறைபாடு, இயக்கம், செவித்திறன் மற்றும் அறிவாற்றல் குறைபாடு உட்பட பல்வேறு வகையான குறைபாடுகளினால் ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதைக் காட்டும் ஆய்வுகளின் விஷேட அறிவையும் ஒன்றியமானது எடுத்துக்கொள்கின்றது” என்று டாக்டர் பெர்னாண்டோபுள்ளே கூறினார்.

மேற்கூறியவற்றைக் கருத்திற் கொண்டு, இந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் நடைபெற்ற கொள்கை உரையாடலில் விரிவாகக் கலந்துரையாடப்பட்ட ‘இயலாமை உடையோர் உரிமைகள் சட்டமூலம்’ இனை சட்டமாக்குவது தொடர்பான செயல்முறையை விரைவுபடுத்துவதற்கும் விவாதத்தைத் தொடங்குவதற்கும் ஒன்றியமானது தனது முயற்சிகளை வலுப்படுத்தியுள்ளது.

நடைமுறைக்கு மாற்றுவதற்கு, இயலாமை உடையவர்களின் உரிமைகளை நிறைவேற்றுவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு, இயலாமை உடைய குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கல்வியிலிருந்து வெளியேற்றப்படுவதை அங்கீகரிப்பதானது, பிற்கால வாழ்க்கையில் வேலைவாய்ப்பு மற்றும் பொது சேவைகள் போன்ற வாய்ப்புகளுக்கான சமமான அணுகலைப் பாதிக்கின்றது, புதிய முயற்சிகள் தொழில் பயிற்சித் துறையில் போலியாக உருவாக்கப்பட்டுள்ளன. அவரது அமைச்சின் கீழ் உள்ள சமூக சேவைகள் திணைக்களம் இயலாமை உடைய இளைஞர்களுக்காக மட்டக்களப்பில் ஒன்பதாவது தொழிற்பயிற்சி நிலையத்தை (VTI) திறந்து வைத்ததாக ஒன்றியத்தின் தலைவரான கலாநிதி பெர்னாண்டோபுள்ளே தெரிவிக்கின்றார். ஏற்றுக்கொள்ளப்பட்ட உத்தியானது, பொது-தனியார் கூட்டாண்மையின் இயல்பில் காணப்படுகின்றது. இதன் மூலம் இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்கான வாய்ப்புகளுடன் கூடிய பயிற்சி வேலைவாய்ப்புகளுக்கான தனியார் துறை பணியிடங்களுக்கு பரிந்துரைகள் மூலம் அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்வதாகும். “இயலாமை உடையவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சர்வதேச தினத்தை முன்னிட்டு, பாடசாலையிலிருந்து வேலைக்குச் செல்லும் மாற்றத்தை உறுதி செய்வதற்கான நமது மூலோபாய முயற்சிகளில் ஒன்றை நனவாக்கும் வகையில், மட்டக்களப்பில் தமிழ் ஊடகத்தில் முதல் VTI ஐத் திறந்து வைத்து, அதை நிறுவுவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கிளிநொச்சியிலும் இதே போன்ற ஒரு நிறுவனம் உள்ளது” என்று டாக்டர் பெர்னாண்டோபுள்ளே கூறினார்.

இது போன்ற மற்றொரு மூலோபாய முயற்சியானது, பல துறை சார்ந்த சேவைகளை வழங்கும் அதே வேளையில், இயலாமை உடைய குழந்தைகளை முன்கூட்டியே அடையாளங் காண வசதியாக, குழந்தை வழிகாட்டுதல் மையங்களை நிறுவும் வடிவத்தை எடுக்கின்றது. “இது போன்ற இரண்டாவது குழந்தை வழிகாட்டல் மையம் அம்பலாங்கொடையில் திறக்கப்படும், மேலும் 2022 ஆம் ஆண்டில் மேலும் நான்கு மாவட்டங்களில் இதுபோன்ற மையங்களை நிறுவ நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” என்று டாக்டர் பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டார்.

முடிவில், தெரிவுக்குழு மற்றும் ஒன்றியத்தின்; சார்பில் கலாநிதி பெர்னாண்டோபுள்ளே கூறுகையில், “இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதை ஒப்புக்கொண்டாலும், இயலாமை உடைய நபர்களின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் கண்ணியத்தை மதிக்கின்ற, ஊக்குவிக்கின்ற, பாதுகாக்கின்ற மற்றும் ஆதரிக்கின்ற ஒரு நாட்டை உருவாக்குவதன் மூலம் இயலாமை உடையவர்களின் வாழ்வை மேம்படுத்தும் முயற்சியில் பாராளுமன்றமும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியமும் உறுதியாக உள்ளன” எனத் தெரிவித்தார்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks