பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
தற்போதைய கொவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் டிஜிட்டல் கருவிகள், தொழில்நுட்பம் சார்ந்த திறன்கள் போன்றவற்றில் சிறுமியருக்கு சமத்துவமான அணுகல் கிடைப்பதை உறுதிப்படுத்தவும், சிறுமிகளின் முன்னேற்றத்துக்கு சிறந்த சூழலை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை புதுப்பிப்பதுடன், அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதற்கான அவசியம் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கப்படவேண்டும் என ஒன்பதாவது பாராளுமன்றத்தின், பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே தெரிவித்தார்.
‘சிறப்பானதைக் கட்டியெழுப்ப டிஜிட்டல் பிளவை அகற்றல்’ என்ற உறுதிமொழிக்கு அமைய எமது முயற்சிகள் அமைந்துள்ளன என்று 2021 சர்வதேச சிறுமியர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
“கொவிட் தொற்றுநோயின் வருகையுடன் இலங்கை மிகவும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறையை எதிர்கொண்டிருப்பதுடன், தொடர்ச்சியாக எதிர்கொண்டும் வருகிறது. இந்த டிஜிட்டல் மயமாக்கம் நாளாந்த வாழ்க்கையுடன் தொடர்புபட்டிருப்பதுடன், பெரும்பாலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கள் போன்ற விடயங்களில் தெளிவாகத் தெரிகிறது.”
2018ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கைக்கு அமைய இலங்கையின் சனத்தொகையில் 25 வயதுக்கு குறைவான 47.2 சதவீதமானவர்கள் வீடுகளில் இன்னமும் இணையத்துக்கான அணுகல் இல்லை. இது வெறும் மதிப்பீடாக இருந்தாலும் தற்போதைய புதிய வாழ்க்கைச் சூழல் மற்றும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட கல்வி உலகத்தில் மேலும் பலர் விலக்கப்படுவதற்கான வாய்ப்புக் காணப்படுகிறது.
தொற்றுநோய்க்கு முன்னர் யுனிசெப்/ஐ.பி.ஐ.டி ஆகியவற்றினால் 2018ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையில், “11-18 வயதுப் பிரிவில் 67.6 வீதமான ஆண் பிள்ளைகள் ஒன்லைன் அணுகலைக் கொண்டுள்ளபோதும் ஒப்பீட்டளவில் 33.1 வீதமான பெண் பிள்ளைகளே அதற்கான அணுகலைக் கொண்டுள்ளனர். பிராந்திய வேறுபாடுகளின் அடிப்படையில் கிராமிய மற்றும் பெருந்தோட்டத் துறை பின்தங்கியுள்ளன. இந்த நிலைமை தொடர்ந்தால், தொழில்நுட்பம் நிலைமை மாற்றியாக மாத்திரமன்றி ஆண் பிள்ளைகளுக்கும் சிறுமியர்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வும் அதிகரிக்கும்’ என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘இதுவரை, 16 வயது வரையிலானவர்களுக்கு கல்விக்காகக் காணப்படும் அணுகலில் ஆண் பிள்ளைகள் மற்றும் சிறுமியர்களுக்கிடையில் சமத்துவத்தை அடைந்திருப்பதுடன் அதனைத் தொடர்ந்தும் பேணி வருகின்றோம். ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் கல்வி அறிவு வீதம் சற்றுக் குறைவாக இருந்தாலும் இலங்கையின் கல்வி அறிவு வீதம் 91.7 வீதமாகக் காணப்படுகிறது. எவ்வாறாயினும், தொற்றுநோயின் தாக்கம், மேசையிலிருந்து கற்றல் என்ற முறைமையை டிஜிட்டல் ரீதியான கற்றலுக்கு மாற்றியிருப்பதுடன், கிராமப்புற மற்றும் பெருந்தோட்டத் துறைகளில் உள்ள சிறுமியர்களுக்குக் கிடைக்கும் கல்வியின் நன்மைகளில் பாதிப்பை ஏற்படுத்துவிடுமோ என்ற அச்சமும் உருவாகியுள்ளது. நிகழ்நிலை கற்றலின் மீது தங்கியுள்ளமை, தகவல்களுக்கான அணுகல், வீட்டு வன்முறைகள் அதிகரித்து, வறுமை நிலைமை அதிகரித்துள்ள சூழலில் சிறுமிகள் பிரதான கல்வியை இழப்பதற்கான வாய்ப்புக்கள், சாதாரண வேலைவாய்ப்புக்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்’.
கொவிட்டினால் சிறுமியர்களுக்கு ஏற்படும் எதிர்மறையான தாக்கத்தின் இடைவெளி மற்றும் சமச்சீரற்ற தன்மையை அடையாளம் கண்டு இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் பெண்களுடனும், சிறுமியர்களுடனும் நிற்கிறது. இவர்கள் மீண்டும் எழுவதற்கு அவர்களுக்கு சிறந்த இடத்தைக் கட்டியெழுப்புவதற்கும் அவர்களுடன் இணைந்து நிற்கிறது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks