பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கு குறிப்பிட்ட திகதியை நிர்ணயிக்க நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பிறகு உடன்பாடு எட்டப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபத்திரன தெரிவித்தார்.
மேலும், குறிப்பிட்ட தினத்தில் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்காகவும், அந்த வழக்குகளை அடையாளம்காணும் முறையை வகுப்பதற்காகவும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை இலக்கம் 449 இன் அடிப்படையில் ஜூன் மாதம் 28ஆம் திகதியன்று அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அச்சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (03) நடைபெற்ற பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டத்தில் கலந்துக்கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சிறுவர்களை நீதிமன்றத்திற்கு வரவழைக்காமல் பிற தொலைதூர இடங்களில் தொடர்புடைய ஆதாரங்களை வழங்க ஒவ்வொரு மாகாணத்திலும் ஒன்பது நிகழ்நிலை வடிவிலான பதிவு மையங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது என்றார். மேலும், மேற்கண்ட இடங்களில் நேரடி சாட்சிப்பதிவு மையங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதன் தலைவர் இக்குழுவுக்கு மேலும் தெரிவித்தார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கை 2019ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், அதைச் செயல்படுத்துவதற்கான செயற்திட்டம் 10 தொடர்புடைய அமைச்சுக்களின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார். குழந்தைகள் பாதுகாப்புக்கான தேசிய தரவுத்தளத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து ஆரம்பிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம், அடிமைத்தனம் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக தற்போதுள்ள சட்டங்களை வலுப்படுத்தவும், புதிய சட்டங்களை கொண்டு வரவும் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க உரிய நடவடிக்கைகளைத் விரைந்து ஆரம்பிக்கவும் ஒன்றியம் வழிநடத்தும் என பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தவிசாளர் இராஜாங்க அமைச்சர் கௌரவ வைத்தியர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே இதன்போது தெரிவித்தார்.
இந்த நாட்டில் சிறுவர்களின் பாதுகாப்பிற்காக சட்டங்களை உருவாக்கும் நிறுவனமாக, 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து சிரேஸ்ட பிரஜைகளுக்கும் பொறுப்பு உள்ளதாக அவ் ஒன்றியத்தின் பிரதி தவிசாளர் ரோஹினீ கவிரத்ன தெரிவித்தார். கொவிட் நோய்தொற்று காலத்தின்போது சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 55,000 விசாரணைகளைப் பெற்றுள்ளதாகவும், கடந்த 6 மாதங்களில் 4,740 சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்ததோடு பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான பிரச்சினையில் அரசியல் ரீதியான கருத்துகளைப் பொருட்படுத்தாமலும் எந்த ஒரு எதிர்மறை கருத்துக்களுக்கும் இடம்கொடுக்காமல் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் ஒன்னைந்து செயற்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒன்றியத்தின் துணைத் தலைவர் இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல தெரிவிக்கையில், ஊடகங்களில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களைப் வெளியிடும்போது சில தணிக்கைகள் காணப்பட வேண்டும் என்றும் தற்போதைய ஊடகங்களில் சிறுவர் துஷ்பிரயோகத்தைப் அறிக்கையிடும்போது சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களையும் மேலும் துன்பத்துக்குள்ளாக்குவதாகவும் ஊடக அறிக்கையிடல் முறை மற்றும் தொடர்புடைய விடயங்கள் தொடர்பான சமூக ஊடகங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவது அவசியம் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார். குறிப்பாக, பாதிக்கப்பட்ட சிறுவர்களின் அடையாளத்தை ஊடகங்கள் வெளிப்படுத்துவதைத் தடுப்பதன் முக்கியத்துவத்தையும், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சட்ட செயல்முறை பற்றிய விரிவான தகவல்களை ஊடகங்கள் வழங்குவதைத் தடுப்பதின் அவசியத்தையும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
18 வயதிற்குட்பட்ட எந்தவொரு ஆண் அல்லது பெண் சிறுவர்களை வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்துவதற்கு எதிராக சட்டத்தின் கடுமையான அமலாக்கத்தின் முக்கியத்துவம், சிறுவர் துஷ்பிரயோகம் குறித்த சட்டங்களை அமல்படுத்துதல் மற்றும் மிலேச்சத்தனமான சிறுவர் துஷ்பிரயோகம் தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் சிறுவர்கள் தொடர்பான சில பழைய சட்டங்களைப் புதுப்பித்தல், பாதுகாப்பு தொடர்பில் அனைத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையிலான முறையான ஒருங்கிணைப்பு அவசியம் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
பாலின சமத்துவம் குறித்து பெற்றோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், செயன்முறையை ஒழுங்குபடுத்துவதற்கும் மற்றும் நீண்டகால குழந்தைகள் துஷ்பிரயோகம் தடுப்பு திட்டங்களை செயற்படுத்துவதற்கும் ஒரு தனி சமூக சேவைகள் திணைக்களத்தை நிறுவுவதன் அவசியமும் இதன்போது விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தின்போது பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் பிரதி தவிசாளர் இராஜாங்க அமைச்சர் சீதா ஆரம்பம்பொல மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரோஹிணி கவிரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் டயானா கமகே, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபத்திரன மற்றும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சு உள்ளிட்ட சிறுவர் பாதுகாப்புடன் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகம் மற்றும் பணியாட் தொகுதியின் பிரதானி குஷானி ரோஹனதீர மற்றும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் செயலாளர் ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks