பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறை மறுசீரமைப்பின் போது பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் அந்த மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆரச்சி தெரிவித்தார்.
இந்நாட்டில் பொதுமக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் விகிதாசார அடிப்படையில் குறைந்தளவு காணப்படுவதாக குறிப்பிட்ட வன்னிஆரச்சி அவர்கள், ஆசியாவில் ஏனைய நாடுகள் இலங்கையை விட முன்னிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழு, அதன் தலைவர் சபை முதல்வரும், வெளிநாட்டு அமைச்சருமான கௌரவ தினேஷ் குணவர்தன தலைமையில் ஜூன் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
உத்தேச மறுசீரமைப்புகளில் அந்த சிக்கலை தீர்ப்பதற்கு சாதகமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
அதேபோன்று, தெரிவுக்குழுவொன்றை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு பெண் உறுப்பினர்களுக்கு உள்ள சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு என்றும், தன்னை இந்தக் குழுவில் நியமித்தமை தொடர்பில் நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks