பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ. ரணில் விக்ரமசிங்க,
ஜனாதிபதி – இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு
ஜூலை மாதம் ஒன்பதாம் நாள், 2024
மேன்மை தாங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,
பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பரிந்த ரணசிங்க நியமிக்கப்பட்டமை தொடர்பானது
சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேனாவுக்கு பணி சிரேஷ்டத்துவம் மற்றும் தகுதி இருந்தபோதிலும், சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பரிந்த ரணசிங்கவை பதில் சட்டமா அதிபராக நியமித்தமை தொடர்பில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் (WPC) சார்பாக எமது கவலையை வெளிப்படுத்தும் வகையில் நான் உங்களுக்கு எழுதுகின்றேன்.
இலங்கை நாட்டினது முழு வரலாற்றிலும், ஒரு பெண் மட்டுமே சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதால், இவ்வாறான நியமனமானது தலைமைப் பொறுப்புகளை வகிப்பதில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவடைவதைக் மேலும் மோசமாகியுள்ளது என்பது தொடர்பாக பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் (WPC) வருத்தம் தெரிவிக்கின்றது. பெண்களை வலுப்படுத்தல் மற்றும் பால்நிலை சமத்துவத்தை உள்ளடக்கிய தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை முன்னுரிமைகளைக் கருத்தில் கொண்டு நோக்கும்போது இத்தகைய நியமனம் பால்நிலை பக்கச்சார்புகளை அகற்றுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுடன் நேரடியாக முரண்படுகிறது. குறிப்பாக, தங்களது மேன்மை தாங்கிய தலைமையின் கீழ் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுப்படுத்தல் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட பெண்கள் வலுப்படுத்தல் சட்டத்தின் நோக்கமும் குறித்த நியமனத்துடன் முரண்படுகின்றது.
எனவே, இவ் விண்ணப்பத்தை கவனத்திற்கொண்டு, சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேனாவிற்கு இலங்கையின் சட்டமா அதிபராக கடமையாற்றும் வாய்ப்பை வழங்குமாறும், பால்நிலை சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், அவரது சிரேஷ்டத்துவத்தை அங்கீகரிக்குமாறும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் (WPC) அரசாங்கத்தை வலியுறுத்த விரும்புகிறது.
இந்த விண்ணப்பத்துக்கு சாதகமான பதிலை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
நன்றி
உண்மையுள்ள,
டாக்டர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே (எம்பிபிஎஸ், எம்எஸ்டி, எம்டி, எம்எஸ்சி – சமூக மருத்துவம்)
பாராளுமன்ற உறுப்பினர்
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத் தலைவர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks