பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
இலங்கையின் நிருவாகத்துறையில் மதிப்புக்குரிய ஓர் ஆளுமையாகத் திகழ்ந்த திரு. சாம் விஜேசிங்க, எளிமையும் பழைமையுமிக்க ஓர் அழகிய கிராமத்தில் இருந்து ஆரம்பித்து, அதிகார உயர்மட்டம் வரையான பதவிக்கு உயர்ந்துசென்றார். தனது ஆரம்பக் கல்வியை விஜயா மகா வித்தியாலயம், ராகுல கல்லூரி, மாத்தறை, ஆனந்தா கல்லூரி, கொழும்பு மற்றும் புனித தோமஸ் கல்லூரி, கல்கிசை ஆகிவற்றில் பெற்ற திரு.விஜேசிங்க, ஒரு தலைவராகவும் கல்விமானாகவும் விளையாட்டு வீரராகவும் இப்பாடசாலைகளில் சிறந்து விளங்கினார். லண்டன் பல்கலைக்கழகத்தில் 1944 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற திரு. விஜேசிங்க, பின்பு இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியைத் தொடர்ந்து, சட்டத்தரணியாகத் தகைமை பெற்றார். கனடாவிலுள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் தனது கல்வியை மேலும் தொடர்ந்த திரு. விஜேசிங்க, அங்கே சட்டமுதுமாணி பட்டத்தினையும் பெற்றுக் கொண்டார். 1948 ஆம் ஆண்டு முடிக்குரிய சட்டவுரைஞராகத் தனது தொழிலை ஆரம்பித்த திரு. விஜேசிங்க, மதிப்புக்குரிய சட்டத்துறைத் தலைமையதிபதி திணைக்களத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னிகரற்ற சேவையினை ஆற்றினார். பிரதிநிதிகள் சபையின் செயலாளர் எனும் முக்கிய வகிபாத்திரத்தை 1964 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொண்டதன் மூலம் திரு.விஜேசிங்க சட்டவாக்கத் துறையில் தனது நீடித்த தொடர்பின் ஆரம்பத்திற்கான தடத்தினைப் பதித்தார். இலங்கைக் குடியரசின் அரசியலமைப்பிற்கான அத்திவாரத்தினை வரைந்த அரசியலமைப்புச் சபையின் செயலாளராக முக்கிய வகிபாத்திரத்தினை வகித்த திரு.விஜேசிங்க, 1972 ஆம் ஆண்டு இலங்கை குடியரசாக மாறியபோது புதிய அரசியலமைப்பை வரைவதில் முக்கிய பங்களிப்பை செய்தார். ஒற்றை அவையினையுடைய சட்டவாக்கம் தாபிக்கப்பட்டதுடன், திரு.விஜேசிங்க அதன் முதலாவது பாராளுமன்றச் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார். பாராளுமன்றச் செயலாளர் நாயகமாகத் திரு.விஜேசிங்க பதவி வகித்த காலப்பகுதியில், இலங்கையின் ஜனநாயகப் பண்பாண்மையினை மீள்கட்டமைத்த நிலைமாற்றச் சட்டவாக்க முயற்சிகளை மேற்பார்வை செய்து, இணையற்ற கண்ணியத்துடனும் வேணவாவுடனும் சுமார் இரண்டு தசாப்தங்களாகச் சட்டவாக்கத்தினை வழிநடத்தினார். பாராளுமன்றத்திற்கு அப்பால், இலங்கையின் முதலாவது நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளராக (ஒம்புட்சுமன்) நியமிக்கப்பட்டதோடு பின்னர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராவும் பணியாற்றினார். எனும் இவரின் வகிபாத்திரத்தில் இவரின் பரோபகாரப் பண்பாண்மை வெளிப்பட்டதுடன் இப்பதவியில் நிர்வாக வகைப்பொறுப்புக்காகவும் பிரஜைகள் உரிமைகளுக்காகவும் ஒரு தசாப்த காலமாகப் பரந்து செயற்பட்டார். 2014 ஆம் ஆண்டு தனது தகையார்ந்த 93 வயதில் திரு. விஜேசிங்க மரணித்தாலும், இலங்கையின் ஜனநாயகத் தளத்தின் நீண்டு நிலைக்கும் கட்டமைப்பில் இவரின் ஆன்மா அழியாது என்றும் வாழ்கின்றது. இவரின் மேதகு வாழ்வினை நாம் நினைவுகூர்கையில், எம் நாட்டிற்கும் அதன் மக்களுக்குமான சேவையில், சேவை மற்றும் தலைமைத்துவத்திற்கான உன்னதத் தேடலில் எம்மை மீள அர்ப்பணிப்பதன் மூலம் நாம் இவர் நினைவுகளை கௌரவிப்போம்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks