பார்க்க

E   |   සි   |  

இருக்கை வசதி

சபாமண்டபத்தினுள் உறுப்பினர்களுக்கான இருக்கை இட வசதியானது படிப்படியாக உயர்ந்து செல்லக் கூடியவாறு மேசைகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. வளிச் சீராக்கம் செய்யப்பட்டுள்ள சபாமண்டபம் 232 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இருக்கைகளைக் கொண்டுள்ளதால், அமைப்புத் திருத்தம் எதுவும் செய்யப்படாமல் மேலும் 16 பேரை உள்ளடக்கக் கூடிய வசதி உண்டு.

அரசியலமைப்பின் பிரகாரம் தெரிவுசெய்யப்பட்ட இருநூற்று இருபத்தைந்து உறுப்பினர்கள் ஆறு வருடங்களுக்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பர். பாராளுமன்றத்தின் ஆக்க அமைவு பற்றி அரசியலமைப்பின் 98ஆம், 99 ஆம் உறுப்புரைகள் கூறுகின்றன. நூற்றுத் தொண்ணூற்றாறு உறுப்பினர்கள் பொதுத் தேர்தலொன்றில் மக்களால் நேரடியாகத் தெரிவுசெய்யப்பட, எஞ்சிய 29 ஆசனங்களும் அத் தேர்தலில் போட்டியிட்ட ஒவ்வொரு அரசியல் கட்சியும் / சுயேச்சைக் குழுவும் பெற்ற வாக்குகளின் விகிதாசாரத்தின் அடிப்படையில் அவற்றுக்கிடையே பங்கிடப்படுகின்றன. எல்லாக் கட்சிகளுக்கும் குழுக்களுக்கும் சபையில் அவற்றின் வலிமையின் விகிதாசாரத்தில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசாங்கக் கட்சிகளின் ஆசனங்கள் அக்கிராசனத்தின் வலப்புறமாகவும் எதிர்க்கட்சிகளின் / குழுக்களின் ஆசனங்கள் இடப்புறமாகவும் உள்ளன.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks