E   |   සි   |  

செங்கோல்

பாராளுமன்றத்தின் அதிகாரச் சின்னமாகத் திகழும் செங்கோல் 1949 ம் ஆண்டு பிரித்தானியப் பொதுச்சபையினால் இலங்கைப் பிரதிநிதிகள் சபைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அது 28 இறாத்தல் நிறையைக் கொண்டுள்ளதோடு 48 அங்குல நீளமுடையது. இச் செங்கோல், கருங்காலி மரத்தினால் செய்யப்பட்டு, வெள்ளி, 18 கரட் தங்கம், நீலமாணிக்கக்கற்கள் என்பவற்றினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தினதும், பாராளுமன்றத்தினூடாக சபாநாயகரினதும் அதிகாரச் சின்னமாகச் செங்கோல் விளங்கி வருவதால், செங்கோல் இன்றி பாராளுமன்ற அமர்வு இடம்பெற முடியாது. சபாநாயகர் சபாமண்டபத்திற்கு வருகை தரும் போதும், வெளியேறும் போதும், அவருக்கு முன்னே, படைக்கலச்சேவிதர் செங்கோலை ஏந்தியபடி செல்ல, அவரைத் தொடர்ந்து பாராளுமன்றச் செயலாளர் நாயகமும், பிரதிச் செயலாளர் நாயகமும் உதவிச் செயலாளர் நாயகமும் செல்வர்.

பாராளுமன்ற அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கான மேசைக்குக் கீழே, அதற்கென அமைக்கப்பட்டுள்ள தாங்கியில் படைக்கலச் சேவிதரால் வைக்கப்பட்ட செங்கோல் காணப்படும்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks